உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு : 2

இரங்கல் மாலை : 1

தமிழ்த் திருவரங்கர் இறையடி எய்தியமைக்கு இரங்கித் திருவரங்கர் இளவலார் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கு

அறிஞர் பெருமக்கள் விடுத்த

இரங்கலுரைகளுள் சில

தமிழ்மக்களின் தவக்குறையை என்னென்பது! தங்கள் (வ. சு.) அண்ணாவின் தமிழ்ப்பற்றுக்கு எல்லை காண்பரிது! என் அண்ணாவின் (ந. மு. வேங்கடசாமி நாட்டார்) 60ஆம் ஆண்டு நிறைவு விளம்பரம் அவர்களுக்கெட்டியதும் அவர்கள் தாமாகக் கடிதம் உறைகள் முதலாயின அச்சிட்டுப் பொருள் திரட்டத் தொடங்கினர். இத்தகைய அன்பு யான் யார்மாட்டும் காணவில்லை. இப் பெரியார் ஏன் இவ்வளவு இளமையில் இவ்வுலக வாழ்வை நீத்தல் வேண்டும்? இறைவன் செயலில் நீதியுண்டு என அறிஞர் கூறுகின்றனரே! எனக்கு விளங்வில்லை! மு. கோவிந்தராச நாட்டார்.

பழைமை வாய்ந்த சொன்மணிக்கலன்கள் பல ஒளி பெற்றிலங்கத் தூயவாக்கியும் புதுக் கலன்கள் பல சமைப்பித்தும் அழகுநலங் கனியத் தனக்கு அணிந்து மகிழ்ந்த திருமகனை இழந்தது தமிழ்த் தாயின் தவக்குறைவேயாம். சைவ உலகமும் ஒப்பற்ற திருத்தொண்டர் ஒருவரை இழந்தது.

- நா. ஆறுமுகம் பிள்ளை.

நல்ல பதிப்பாசிரியர் ஒருவர் திடீரென இவ்வுலக வாழ்வை விட டு நீங்கியது தமிழ் உலகை மிகவும் வருத்துகிறது. எனது உள்ளம் உண்மையில் உணர்வற்று நிற்கிறது. உடைந்து உடைந்து பாழாகிறது.

சிறுவை நச்சினார்க்கினியன்.

திரு. வ. தி. தமிழகத்தின் உயர்வுக்கு உழைத்தவருள் ஒருவர். ஒருவகையில் தமிழகத்தின் முதல் தலைவரும் ஆவர்.