உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

137

கண்கவர் கட்டடங்களுடன் பொன்பூச்சொளி எழுத்து களுடன் இளைஞரும் விரும்பிப் போற்றுமாறு மேனாட்டார் பதிப்புகளை ஒப்பத் தமிழ்நூல்களை எளிதே எவரும் பெறுமாறு முதற்கண் பதிப்பித்த பெருமையை உடையவர். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்று கூறினாலே தமிழ்மக்கள் எவருள்ளத்தும் அழகிய கண்கவர் வனப்புற்ற நூல், பிழையில்லாத நூல், தமிழ் மாண்பு காணும் நூல், வாழ்க்கையின் உயர்வுக்காய நூல், எவரும் விரும்பித் தம் இல்லத்துட் பெற்றுப் போற்றும் நூல் என்ற எண்ணங்களைத் தோற்றுவிக்கும் தனிப்பெருமை கண்ட பெரியார் அவர்.

பேராசிரியர் பெருந்தகைமையும், பெருநாவலர் சிறப்பும், முதுபெரும் புலமையும் பூண்டுள்ள எங்கள் மறைமலையடி களாரின் மருகராயிற்றே! எங்கள் தமிழ்ப் பெருமாட்டி புலவர் போற்றுந் தனித்தமிழ்ச் செல்வி நீலாம்பிகையின் கணவராயிற்றே! வீறுற்ற தமிழரை யெல்லாம் ஒருங்கே திரட்டி ஒப்புயர்வற்ற கட்டுரை, சொற்பொழிவு நூல் வெளியீடு இவற்றால் தமிழகம் ஓங்க நாளும் திருப்பணி பூண்டொழுகும் பெருந்தமிழ்த் தளபதி திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கள் தமையனார் ஆயிற்றே!

என்னே இஞ்ஞாலம்! நிலத்தின் பொறையாக நாட்டின் புல்லுருவியாகத் தமிழின் பகையாக எத்துணையோ பயனிலார் வாழ்வதைக் காலம் அறியவில்லையே! என் இனிய பெருமானின் இன்னுயிர் என்றும் இறவா இன்பநிலை எய்தி எழிலோடிருக்கு மாறு வேண்டுகின்றேன்.

சிவ.குப்புசாமி.

தங்கள் தமையனார் அவர்கள் மறைவினால் தென்னாடு ஓர் அரியபெரிய கரும் வீரரை இழந்தது. தமிழரும் சைவசமயிகளும் தமிழறிவு வளர்ச்சிக்கும் சைவசித்தாந்த ஞானம் பரவுதற்கும் பெரும்பாடு பட்டுழைத்த ஒரு பெரு முயற்சியாளரை இழந்தனர். நான் என்பாற் பேரன்பும் பெருமதிப்புங் கொண்டிருந்த அருமை நண்பரை இழந்தேன்.

-

வெ.ப.சுப்பிரமணி முதலியார்.

நம் அருமை உடன்பிறந்தார் இறையடி எய்தியது உணர்கின்றேன். அந்தோ! கழகம் செய்த நற்றவம் உருப்பெற்றதென விளங்கினர்! தமிழ்த்தாய்க்குக் கழகம் செய்துள நற்றொண்டுகட் கெல்லாம் முதல்வராக விளங்கினார்! தம் அருமை நண்பர் நாவலருடன் தாமும் தமிழ்த்தாயின் திருவடி நீழலில் இனிது