உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

இருப்பர்! என் செய்வாம்! தமிழர்தம் வலி, இங்ஙனம் அண்மையில் ஈராற்றல் பிரிந்தேகியதே!

அரங்க வேங்கடாசலம் பிள்ளை,

கரந்தை.

தமிழ் நூல்களைச் சிறந்த முறையில் வெளிவரச் செய்த ஒப்பற்ற பெருமை அவர்களுக்கே உரியது. அவர்களுடைய சிறந்த தமிழ்த்தொண்டுக்குத் தமிழகம் என்றும் கடமைப்பட்டதாகும். அவர்களுடைய பிரிவு ஆறத்தக்கதுமில்லை, ஆற்றத்தக்கது

மில்லை.

நீ.கந்தசாமி, பள்ளியக்கிரகாரம்.

பல இ டர்களுக்கு இடையே கழகத்தை நடத்திச் சிறப்புறச் செய்த பெருமை திருவரங்கம் பிள்ளை ஒருவர்க்கே உரியது.

அருட்டிரு. சச்சிதாநந்த அடிகள்,

கொரடாச்சேரி.

அவர்களது மலர்ந்த முகமும் இனிய பேச்சும் எப்போதும் அகக்கண்முன் நிற்கின்றன.

-

- திரு. சிவசைலம் பிள்ளை.

அவர்கள் தமிழ்மொழிக்குச் செய்த அரிய தொண்டை எந்தத் தமிழனாலும் மறக்க முடியாது. தென்னிந்திய சைவசித்தாந்தக் கழகம் நிறுவப்பட்டதன் பின்னரே, தமிழர் களாகின்ற நாம் அழகான, கண்ணைக் கவரக்கூடிய மகிழ்ச்சி தரக்கூடிய தமிழ் நூல்களைப் பார்க்கத் தொடங்கினோம்.

சி.பன்னிருகைப் பெருமாள் முதலியார்.

திருவரங்கம் பிள்ளையவர்கள் செய்துவந்த தொண்டு மலையினும் மாணப் பெரிது. தமிழுலகும் சைவவுலகும் ஈடுசெய்ய முடியாமல் வருந்தா நிற்கும்.

பி.வேங்கடாசலம் பிள்ளை.

கேட்டுத் திடுக்கிட்டு உளமுடைந்தேன். என்னே தமிழன்னையின் போகூழ்! அன்னை இரு கண்களில் ஒன்று இழந்தன்றோ நிற்கின்றாள்! ஒப்பற்ற தமிழ்த் தொண்டர்! கழகத்தின் உயிர் நாடி, அவர் உருவமும் தமிழ் நன்மக்கள் மனத்தில் நின்றுலவத் தகுந்த முறையில் ஏற்பாடு செய்யத்