உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

139

தமிழுலகு நன்றியுடன்

மிகையாகாது.

முந்துறும் என

எதிர்பார்ப்பது

ஆர்.பாலகிருஷ்ண முதலியார்.

நானும் என் மனைவியும் ஆறாத் துயரடைந்தோம். என் மகள் காமாட்சி படிப்பதற்கு அவர் அன்புடன் நூல்கள் அனுப்பினார். நாங்கள் திருச்சியில் இருந்தபோது என் இளைய மகள் உடல் திட்பம ய எண்ணெய் பல தடவை அன்புடன் அனுப்பியதை எண்ணும்போது மனம் வருந்துகிறது.

இராவ்பகதூர் க.அரங்கசாமி முதலியார்.

தமிழர் உண்மைத் தமிழராக வேண்டுமென்றும் பேரவாவுடன் ஓயாது உழைத்து வந்த பெருந்தகையாளர் வான் கலந்தார். அறிவுடையவர்; அடக்கமுடையவர்; தமிழ்மொழி யிடத்தும் சைவ சமயத்திலும் மாறாத் தனி அன்புடையவர்; தமிழ்ப் பெரியார்; திருவரங்கத்தை எந்தப் பெருவரங்கத்தில் னிக் காணப்போகின்றோம்! நீறணிந்த நுதலும் புன்னகை பூண்ட முகமும் அகக் கண்ணெதிரில் தோன்றுகின்றன. கல்வியிற் சிறந்த நீலாம்பிகைக்கும் கருத்துக்கிசைந்த உங்களுக்கும் என்ன ஆறுதல் சொல்ல இயலும்?

பண்டித எஸ். எஸ். ஆனந்தம்.

கழகத்திற்கும் அதன் வாயிலாகப் பல நல் அணிகலன் பெற்றுவந்த தமிழகத்திற்கும் ஈடுசெய்ய இயலாத துன்பமே இது!

மு.வரதராசனார்.

திடுக்குற்றேன்! நம்ப முடியவில்லை. எப்படி மறைந்தனரோ! அன்பார்ந்த அவர்கள் திருத்தோற்றம் என்முன் காட்சியளிக் கிறது. எவ்வளவு ஆற்றல்! எத்துணை வீரம்! ஆற்றிக்கொள்ள முடியவில்லை.

எவ்வாறு

திரு.

அண்ணியார் அவர்கள் உள்ளம் துடிக்கின்றதோ! குழந்தைகள் எங்ஙனம் கையற்று வருந்து கின்றனவோ! திரு. அன்னையார் அவர்களுடைய பெற்ற வயிறு எப்படி வெதும்புகின்றதோ! தங்கள் உடன்பிறந்த நெஞ்சம் எவ்வண்ணம் நைகின்றதோ!

கீ.இராமலிங்கனார்