உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

இந்தப் பிரிவு துன்பமென்னும் முத்திரையை நம் அகத்தில் பதிப்பித்துச் செல்கின்றது.

நவாப். டி.எஸ். இராசமாணிக்கம்.

தங்கள் தமையனார் அவர்களது மலர்ந்த முகமும் இனிய பேச்சும் என் கண்முன் நிற்கின்றன. எட்டு ஆண்டுகளுக்கு முன் செல்விக்குக் கட்டுரைகள் எழுதும்படி திரு. பிள்ளையவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார். இப்பேருதவியை யான் என்றும் மறவேன்.

என்.குழந்தைவேலன்.

அவர்கள் உடல்நலமின்மை அறிந்து சிறிது காலத்திற்கு முன் உடல்நலம் பேணல் தலையாய பணி என நினைவூட்டி எழுதினேன். அவர்கள் தமிழ்மொழிக்குச் செய்துவந்த தொண்டு எவராலும் மறக்கொணாதது. புலவர்க்குச் செய்துவந்த தொண்டும் அவ்வாறே. என்னிடத்தில் அவர்கள் வைத்திருந்த அன்புக்கு எல்லையில்லை.

தூ.சு.கந்தசாமி முதலியார்.

யான் சில நூல்களும் கட்டுரைகளும் எழுத வேண்டும் என்று அடிக்கடி நினைப்பூட்டி வந்துள்ளார். அவர் மனம் குளிருமாறு நிரம்ப எழுத இயலாதவனாயொழிந்தேன்.

ச.சச்சிதானந்தம் பிள்ளை.

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்' என்ற தொடரை நினைந்தும், ‘உடன் பிறப்போடு தோள்வலி போம்' என்பது நினைந்தும் என் உள்ளம் உருகிக் கவலைக் கடலுள் ஆழ்ந்தது.

வித்துவான் வை.குஞ்சிதபாதம் பிள்ளை.

எதிர்பாராத மறைவு உடலையும் உயிரையும் வாட்டிக் காண்டிருக்கின்றது. அருமைக் குழந்தைகள் ஒப்புவிக்கப் பெற்றிருப்பதால் அவர்கள் பொருட்டு உடலைப் பேணி வைத்துக் கொண்டிருத்தல் வேண்டும். திலகவதியார் சரித்திரம் எழுதிய அம்மைக்கு யான் கூற வேண்டியது யாதுளது?

சித்தாந்த ஆசிரியர் ந.சிவகுருநாத பிள்ளை.

நம் அரும்பெருந் தமிழரை இழந்தோம். அருமை நீலாவையும் மக்களையும் நி நினைக்குந்தோறும் நெஞ்சம்