உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

141

நடுங்குகிறது. நீலாவுக்கும் உடல் நலமில்லை என்று கேள்விப் பட்டேன். ஆண்டவன் வன் அமைதி அமைதி அளிப்பாராக. துன்பம், பெருந்துன்பம்.

டாக்டர். S.தருமாம்பாள்.

துயரெல்லாம் தாங்கித் துணை தந்த பெரிய தந்தையாம் வ. தி. பிரிந்தனர் என்ற என்ற நம் நம்பொணாச் செய்தி கேட்டுச் செயலறுகின்றேன். அவர் நீத்த உலகில் இனி எம் போன்றார்க்கு ஏது இடன்? அன்னை நீலக் கண்ணம்மையார் குழந்தைகள் துயர் எண்ணத் தாளகில்லேன். தமிழன்னை தளையறுமுன் ஒப்பற்ற தனயனை இழந்தனன்.

கா.அப்பாதுரைப் பிள்ளை.

முயற்சித் திருவாளர்! அல்லும் பகலும் தமிழுணர்ச்சிப் பெருவெளியில் உலவிய பெரியார்! நாவலர் நாட்டாரவர்கள் பிரிந்த துயரத் தீ ஆறுவதற்கு முன்பே இப் பிரிவுத் தீ எமது வயிற்றிற் கொதிப்பூட்டுகிறது.

தீ

புத்தனேரி ரா.சுப்பிரமணியன்.

கழகக் கற்பகம் தன் ஆணிவேரை இழந்துவிட்டது.

-

வித்துவான் வி.சிவக்கொழுந்து. நண்பர் நாட்டரையா அவர்கள் மறைவு குறித்து உள்ளத்தில் எழுந்த செந்தீயில் இது நெய் சொரிந்தது போலாயிற்று.

அ.மு.சரவண முதலியார்.

எந்தை போன்று எனக்கு உறு துணையாக இருந்தருளியவர். பொறுமையும், இனிய நகையும், அன்பும், பண்பும், அருளும் நிறைந்த அண்ணல். தமிழ்க் கடவுள். ஆற்றொணாத மனக் கலக்கம். ஏங்குகின்றேன். என் செய்வேன்!

-வித்துவான் ந.சேதுரகுநாதன்.

அன்புள்ள அம்மையீர்! செய்தியறிந்து பெரிதும் வருத்த முறுகின்றேன். கற்றுத்துறை போய கற்பரசியாராகிய தங்களுக்குக் குழந்தைகள் சின்னஞ் சிறுவராக இருக்கும் இந் நிலையில் கணவனார் பிரிவு நேர்ந்தது ஆற்றொணாத்துயர் விளைப்பதொன்றே! நிலைமையாமையின் இயல்பு இருந்த வாறிதுவெனக் கொண்டு ஆறுதல் அடைய வேண்டும். உள்ள நிலையைத் துயரத்திற்குள்ளாக்காமல் மக்களைப் பேணுங்கள்;