உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

தமிழ்நூல்களை ஆராய்ந்து புதிய நூல்களை எழுதுங்கள். செயலே ஆறுதல் எய்துதற்குரிய நெறியாகும். தமிழன்னையின் அருமை மகளாகிய உங்களுக்கு இங்ஙனம் நேர்ந்தது கருதி, என் உடனிரக்கத்தை இதனடியாகத் தெரிவித்துக்கொள்கின்றேன். கணவனார் நல்லுயிர் இறையடி நீழலில் இன்புற்று அமைதி எய்துக. இறையருள் உங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக.

பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்.

இற்றைக்குத் தமிழ்நாட்டில் பரவியுள்ள தனித்தமிழ் உணர்ச்சிக்குப் பொறுப்பு வாய்ந்தவர்களில் தங்கள் அருமைத் தமையனாரும் ஒருவர். நம் நாட்டிற்குப் பல துறைகளில் பணிகள் செய்ய ஆற்றல் வாய்ந்தவர். தம் வாழ்நாள் முழுதும் வேண்டிய தொண்டாற்றினார். தொண்டு செய்ய வேண்டியவற்றிற்குத் தக்க ஆக்க வேலைகளைச் செய்துவிட்டுச் சென்றார்.

பி.வி.அரங்கநாத முதலியார், திருவல்லிக்கேணி

அண்ணா! பாறுக்க முடியாத துன்பச் செய்தி. செய்தியறிந்தவுடன், அருமை மகள் பாளையங்கோட்டையில் நோயால் இருந்ததும், அதற்குத் தந்தை போல் இருந்து ஆற்ற வேண்டிய எல்லாப் பொறுப்புகளும் அவர்கள் உடனிருந்து செய்த பேருதவிகளும் அடியேன் மனக்கண்முன் தோன்றின. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தேர்ச்சி பெற்ற திருவாகத் திறமையுள்ள பெரு முயற்சியாளரான தக்கவரைப் பறி கொடுத்துவிட்டது. அடியேன் யாது ஆற்றல் சொல்ல முடியும்? வா.தி.மாசிலாமணி முதலியார்.

அவர்கள் இல்லையேல் கழகம் ஏது? வனப்பு மிகுந்த பதிப்புகள் ஏது? கல்லாதாரையும் கற்கும்படி அவ் வெளியீடுகள் செய்கின்றனவே!

பொ.மாணிக்கஞ் செட்டியார்.

அடைந்தவர்களை அன்புரை கூறி ஆற்றுந்தன்மையும், எல்லாவற்றிற்கும் மேலாக அக்காள், குழந்தைகளைப் பராமரித் தலும், எண்ண எண்ண என் மனம் சஞ்சலப்படுகிறது.

வித்துவான் மதுரை நாயகம்,

திருச்சி.