உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

143

ரு

தமிழன்னை ஒரு காலை இழந்தாள், தாங்கள் தோளைப் பறி கொடுத்தீர்கள்; அன்னை நீலாம்பிகை தன் ஒரு கூறு நீங்கினர். முத்தண்ணாவை இனிக் காணமுடியாது.

டாக்டர் S.M.நமசிவாயம், சேலம்.

தமிழ்நாடு முழுதும் அவர்கள் பருவுடல் மறைவு குறித்து வருந்துகின்றது. கம்பீரத் தோற்றம்; சிங்க நோக்கு; பீடு நடை; அஞ்சா நெஞ்சம்; என்ன செய்வது?

அ.திருஞானசம்பந்த ஓதுவாமூர்த்தி.

கவற்சி, குறிக்கும் தரத்ததன்று. சரிப்படுத்த இயலாத பேரிழப்பு. தமிழரின் நற்காலம். தமிழ்மொழியின் செழிப்புக் காலம், தனித்தமிழின் வளர்ச்சிக் காலம் இன்று துவங்கிற்று என்னும் நன்னிலைக்கு அடிகோலிய அண்ணலார். தவக்கோலங்க காண்ட திரு. நீலாம்பிகையம்மையவர்கட்கும் துணைவலியிழந்த தங்கட்கும் எங்கள் ஆழ்ந்த துயரம் தெரிவிக்கின்றோம்.

- சுகவனம். சிவப்பிரகாசம் பிள்ளை.

பிள்ளையவர்கள் சொல் வணக்கமும், சொல் விருந்தும் மறக்கற்பாலனவல்ல. சென்னைச் சிவனடியார் திருக் கூட்டத்தின் சார்பில் சிவஞானபோத விரிவுரைகள் நடத்த அவர்கள் தோன்றாத் துணையாய் இருந்து அளித்த ஆதரவு போல்வனவும் மறக்கத்தக்கன அல்ல.

- ந.வே.அப்பாத்துரை முதலியார், சென்னை.

சைவத் திருவாளர் வ. திருவரங்கம் பிள்ளை அவர்கள் எமது பழைய நண்பர். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னையில் நிறுவப்பட்ட 1921ஆம் ஆண்டில் இருந்தே அவர்களை எமக்கு நன்றாகத் தெரியும்.

தனிச் செந்தமிழ்ச் செல்வியார் நீலாம்பிகை அம்மையாரை அவர் தம் குழவிப் பருவத்திலிருந்தே எமக்குத் தெரியும். யாம் அம்மையாரை 1922இல் யாழ்பாணத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு திரு. மறைமலையடிகளார்தம் பொதுநிலைக் கழக மாளிகையின்கண் காண்பேமாயினேம். 1925இல் பிள்ளை அவர்கள் செல்விக்குக் கட்டுரைகள் எழுதுமாறு எம்மைத் தூண்டி எமது யாழ்ப்பாண முகவரிக்குப் பத்துக் கடிதங்கள் வரையில் திருத்தமும் அழகும் அமைந்த தமது கையெழுத்தால்

எழுதுவாராயினர்.