உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

די

அவர்களைச்

அவ்வாண்டிலேயே சிதம்பரத்தில் திருவாதிரை நாளில்.... நீறு விளங்கிய நெற்றியோடும் தாழ்வடந் தொங்கிய கழுத்தோடும் காணும் ஓர் அரிய வாய்ப்புப் பெற்றேம்... தமது இயல்பான உயர்ந்த வழக்கம் போலவே தமது அகமலர முகமலர இனிது உரையாடினார்கள்.

கழகப் பதிப்பு நூல்கள் தமது கண்கவர் வனப்பால் யாழ்ப்பாணத்திலே எவ்வாறெல்லாம் பரவுகின்றன என்பதை ஈண்டு யாம் எடுத்தெழுத உறுதியாகக் கருதினும் இக் குறிப்பின் விரி வஞ்சி விடுக்கின்றேம்.

- சுவாமி உருத்திர கோடீசுவரர், சென்னை.

கழகம் என்ற துணையானே தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்று மக்கள் நினைக்கவும் பேசவும் நிற்கவும் பெருமை திரு. வ. தி. அவர்களின் முயற்சிப் பயனாகும். அவர்கள் சான்றோம் மெய்ம்மறுை; தமிழர் செல்வம்; தமிழ்ப் புலவர் தோழர்.

வித்துவான் ஔவை சு.துரைசாமிப் பிள்ளை.

கூற்றுவன் என் ஆரூயிர் நண்பன் செய்து போதரும் அருந்தொண்டைத் தானும் அறிந்தானில்லையே! அவர் தம் அன்பு கனிந்த முகத்தையும் பாடறிந் தொழுகும் அவரது உயரிய பண்பையும் நண்பரொடு அளவளாவும் வகையையும் எங்ஙனம் மறப்பேன்! ஆற்றொணாத் துயரம்!

-

வே.நாகலிங்கம், வட்டுக்கோட்டை, இலங்கை.

தமிழுக்கும் சைவசித்தாந்த நூல்களுக்கும் தம் உடல் பொருள் ஆவி மூன்றனையும் அர்ப்பித்து உண்மைச் சைவத்தமிழ் மக்கள் உள்ளத்தை அரியணையாகக் கொண்டு உவந்திருந்து தமிழகம் முழுவதும் இனிது புரந்த பெருந்திறல் பேர் பெறும் வள்ளல் திருவரங்கனார் இறைவன் திருத்தாள் அடைந்தமை கேட்டுத் துன்பக்கடற் சுழியில் ஊசலாடுகின்றனன்.

அ.வரத நஞ்சைய பிள்ளை.