உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரங்கற் பாக்கள்

தமிழந் தணன்பெற்ற தையலாள் கேள்வ! தமிழர் குடியின் தவமே! - தமிழர்

பணிக்கோர் தனியிருப்புத் தூணே! பழியேம் பணிக்குற்ற தின்று பழுது.

எந்தையே எந்தாய்த் தமிழ்ப்பணிக் கென்றுதன் சிந்தையே தான்கொடுத்த செல்வனே! - நிந்தையே கொண்டும் தமிழ்ப்பணியிற் குன்றாத கோமானே! என்றுனைக் காண்பம் இனி?

கழகங்கள் பற்பலவாம்; காணில் எமக்கே

கழகம் எனவொன்று காட்டிப் - பழகும்

தமிழோசை எங்கும் தழைப்பித்த சான்றோய்! தமிழுலகு நீத்த தெவன்?

தேவார மெல்லாம் தெருப்பாட் டிசையன்றென்(று)

ஓவா துரைத்தார் உரையெல்லாம்

ஓவாத

தன்பணியால் மாற்றும் தகையோய் உனையன்றி என்பணி இந்நாட் டினி?

தனித்தமிழ் வாழ்வின் தவமே! தமிழர்

இனிப்பெறும் பேற்றின் எழிலார் கனிவளமே!

ஏதிலார்க் கும்இனிய ஏந்தலே ஏகுதியோ

கோதிலா நின்புகழ் கொண்டு.

எல்லாத் திருவும் இசைந்தான் இவனெனவே

பொல்லாத் திருத்தான் பொருமினளோ - நல்லோர்கள்

தம்மை நலிவித்துத் தானாள எண்ணினனோ

அம்மையப்ப னானான் அமைந்து.

கா.அப்பாதுரைப் பிள்ளை