உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

அண்ணா திருவரங்கா ஆனா அருங்கடலுள்

எண்ணா தெமையாழ்த்தி எண்ணமெலாம் - மண்ணாகப் போகப் புகுந்தனையோ பொன்னாடும் நன்னாடே

யாகத் தமிழமைச்சாய் ஆங்கு.

முத்தமிழே எத்திசையும் முந்தப் புகழ்மணக்க

வைத்ததனோ டுன்புகழை வைத்தனையே - பத்தினியாள்

நீலாள் நினக்குகந்த நீராள் நினைப்பிரிதல்

ஏலாள் எனல்மறந்த தென்?

இறைவன்எழிற் பண்பனைய இருநால்வர்

மக்களையும் இயைந்த காதல்

நிறைகல்வி பொறை யொழுக்கம்

நீடுநலம் இன்பமொழி நீலாளையும் தரையின்மிசைத் தயங்கவிட்டுத் தனித்தேக எவண்கற்றாய் தமிழ்த்தொண் டாற்றும் முறையுணர்ந்தோய் நாள்வேண்டி முயலாத முறையென்னே மொழிகு வாயே.

வாயேதும் மொழியாது வண்தாயர் உடன்பிறந்தார் நண்பர் வாடத் தூயதமிழ் சிவனெறியும் துணையிழந்து துன்பமுறத் துணிந்து வெள்ளி ஆயமலை சென்றெய்த அகங்கொண்ட அறிவதனை யாருங் கொள்ளார் நாயகனும் ஏன்றுகொளான் ஏற்பானேல் நடுநிலைமை நாடா னாகும்.

ஆகுமுயிர் நம்மைவிட்டங் கரன்றாளை

யணுகலுறின் அவ்வு யிர்க்குப் போகும்வழி நன்றாக்கல் புரிகடமை

செய்தமர்தல் புலமைப் பாலாம்

ஏகுமுயிர் செய்யுரிமை கடமையெலாம்

இறையருளால் இங்கு நல்லார்

ஆகுமுயிர் வழியாக வருமெனற்கோ ரையமிலை ஆறு வாமே.

வளவன் பாண்டியனார்