உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

வேறு

சித்தாந்த நூற்பதிப்புத் தேர்ந்த திருவரங்கன்

பித்தாந்த மக்கள்மனை பீடழிய - முத்தாந்மும்

சேர்ந்தனன்மன் செல்வர்குழுச் சேர்ந்தனன்மன் செந்தமிழோ

டார்ந்தநெறி வாடினன்மன் ஆங்கு.

திருவரங்கா தற்கண்ணு தற்கடவுள்

திருவடியிற் சிறக்கப் பெற்ற

திருவரங்கா நீயிறந்தாய் நின்கழகம் யார்புரக்கத் தெரிந்தாய் ஐயா திருவரங்கா நடனமிடும் திருநெல்வே

லிப்பதியிற் றிகழுஞ் சைவத்

திருவரங்காத் தழுதிரங்கத் திருநீலாம்

பிகைமக்கள் தியங்க மாதோ.

147

குலசை ப.இராமநாத பிள்ளை

சொக்கநாதபுரம் செந்தமிழ்க் கழகம் தனிக்கூட்டம்

சென்றானோ எம்மில் திருவரங்கப் பிள்ளையிவன்

வென்றானோ இப்பிறப்பின் வெம்போரை - நின்று

கிடந்தலறும் கேளிர் கிளைகளெலாம் நீங்க

நடந்தனனோ விண்ணாட்டின் நன்று.

சைவமும் மேன்மைத் தமிழும் நனிவளர

மெய்வகையே வாழ்வை விடுத்தனனால் - மைசெறியும் கண்டத்தன் மங்கையொரு பங்கத்தன் செங்கமலம் அண்டித்தான் வாழும் அவன்.

ஆ. முருகவேள், ஆசிரியர், பைந்தமிழ்.

மும்மைத் தமிழ்வளர்த்த மூவாப் புகழ்நிறைந்த செம்மைத் திருவரங்கச் சீராளா! - மெய்ம்முகிலே! எங்கேபோய் எவ்விடத்தில் எவ்வாறு நீமறைந்தாய் இங்கென்ன செய்கோம் இனி.

தண்ணார் தமிழ்க்குந் தமிழருக்கும் நீசெய்த எண்ணார்ந்த பேருதவி யார்செய்வர் - கண்ணார்ந்த மன்னு திருவரங்க மாமகிழ்வே வாழ்வேநீ

என்னினைந்து சென்றாய் இயம்பு.