உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை டாக்டர் பா. நடராசன்

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு என்பது, அவர் வாழ்ந்த காலத்திய தமிழ்மொழி, சைவத்தின் வரலாறு எனக் கூறலாம். கற்றோர்கள், தமிழில் பேசுதல் தமக்குச் சிறப்பளிக்கா தெனக் கருதிய அக்காலத்து இவர் தாய்மொழிப்பற்றின் மிகுதியால், அம்மொழியாம் தமிழுக்குக் கழகம் கண்டு, பகலும் இரவும் அயராது பாடுபட்டுப் பாரெல்லாம் போற்ற, அக் கன்னிமொழியின் வளம் பெருக்கி வளர்ச்சி கண்டவர். இலக்கியம், இலக்கணம், சமயம், வரலாறு, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இசைத்தமிழ் வளர்ச்சி, நாடகத்தமிழ்ப் பெருக்கம் போன்ற இன்னும் பல்வேறு துறைகளில் நூல்கள் தொடர்ந்துவர, தம் இளையவர் திரு.வ.சுப்பையாபிள்ளை ள அவர்களுக்கு காட்டியாய் இருந்தவர் திருவரங்கரேயாவர்.

வழி

இவர் நெஞ்சுரம் மிக்கவர். தளராத முயற்சியும் சலியாத உழைப்பும் கொண்டவர். வாழ்வின் உயரிய குறிக்கோள்களைத் தெளிவாகத் தேர்ந்து காணும் இயல்பினர்; இனிய சொல்லாலும், இதம் தம் மிக்க மிக்க நடத்தையாலும் பழகியவர் நெஞ்சங்களில் நிலையான இடம்பெற்றவர். குடும்பத்தையும், சார்ந்தவரையும் பேணும் குணநலம் வாய்ந்த செம்மல். தமிழ்மொழியின்பாலும், சைவத்தின்பாலும் இவருக்கிருந்த ஆழமான ஈடுபாடு இவரை அனைவரும் போற்றும் அருமணியாக சுடர்மணியாக

ஆக்கிற்று.

சின்னஞ்சிறு பருவத்தில் தம் தந்தையார் திரு. வயிரமுத்துப் பிள்ளை அவர்களை இழந்த திருவரங்கரும், இவர் தம் உடன்பிறந்தோரும் தன் அன்னையார் சுந்தரத்தம்மையார் அரவணைப்பிலேயே வாழவேண்டியவர்களாயினர். வறுமை யின் தாக்குதலால் திருவரங்கர் கற்றுவந்த கல்விக்குத் தடையேற் பட்டது. ஏதேனும் பணிசெய்து பொருளீட்ட விழைந்த இவர், தூத்துக்குடி வந்து சிற்றாள் வேலையில் ஈடுபட்டார். அங்கு இவருக்கு வழுதூர் அழகிய சுந்தரம்பிள்ளை என்பவர் தொடர்பு