உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

ஏற்பட்டது. இப் பெரியார் சிறந்த சிவநெறியாளர், தவத்திரு மறைமலையடிகளார் திறன் அறிந்த செம்மல்; அடிகளாரிடம் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர்; தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையில் ஈடுபாடும் இவருக்கிருந்தது. இவரது துணையும் தூத்துக்குடித் தங்கலும் திருவரங்கர் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தின. எனினும் தம் வாழ்வில் தக்க பொருள்வளம் ஏற்படவில்லையே என்ற கவலை இவருக்கிருந்தது. எனவே இவர் தூத்துக்குடியில் நிலைத்திருக்க விரும்பவில்லை. வழுதூர் அழகிய சுந்தரனார் ஆலோசனையின்படி கொழும்பு சென்றார்.

அங்கு ஒரு வணிக நிறுவனத்தில் கணக்கெழுதும் பணியில் அமர்ந்த திருவரங்கனார் தம் உயரிய பண்புகளாலும், ஊற்றெனச் சுரந்து பொங்கும் தமிழ்ப் பற்று, சைவப்பற்றுகளாலும் கொழும்பு வணிகப் பெருமக்களிடம் மிக்க நெருக்கமுடையவ ரானார்.

தவத்திரு மறைமலையடிகளாரைக் குறித்து ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த திருவரங்கர், மேலும் அவர்தம் சிறப்பியல்பு களை அறிந்து, அவரைத் தம் உள்ளத்தில் நிலைநிறுத்தி வழிபட்டு வந்தார். அடிகளாரை ஈழத்துக்கழைத்தும் பயன்பெற எண்ணினார். இவரது விருப்பத்துக்கு இசைவளித்தனர் அங்குள்ள தமிழ்ப்பெருமக்கள்,

இருமுறை தவத்திரு மறைமலையடிகளாரை இலங்கைக்கு வரவழைத்து, செந்தமிழ்ச்செல்வம் பற்றியும், சைவவிளக்கம் குறித்தும் அங்குள்ள பற்பல ஊர்களில் சொற்போருக்கு நிகழ்த்த வைத்தார் திருவரங்கர் அடிகளார் இனிய அரிய உரைமணி களைக் கேட்கும் மக்களெல்லாம் ஆனந்தக்கடலில் மூழ்கினர். இதற்கு வாய்ப்பளித்த திருவரங்கரை வணிகப்பெருமக்களும் ஏனைய சான்றோரும் பாராட்டிப் புகழ்ந்தனர்.

திருவரங்கர் செய்த மற்றொரு அரும்பெரும் செயலையும் இங்குக் குறிப்பிடவேண்டும். அடிகளாரின் பொருள் தேவையை உணர்ந்து பல பெருமக்களிடம் பணம் திரட்டி அவருக்கு உதவினார் இவர். இது எளிதான செயலோ? யாவராலும் செய்யதக்கதோ? இவ்வுதவி அடிகளாருக்கு மிக்க பயனை அளித்தது. அவர் தொடங்கியிருந்த மாளிகைப் பணி நிறைவேறுவதற்கும், புதிய அச்சகம் தொடங்குவதற்கும், அவரது அறிவுக் கடல் இதழைச் செம்மையாய் நடத்துவதற்கும் பயன்பட்டது. மேலும் அடிகளாரை ஊக்கி அரும்பெரும்