உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

3

நூல்கள் ஆக்கவும், ஆய்வுப்பணிகளைச் செவ்வனே செய்யவும் வாய்ப்பளித்தது. திருவரங்கரின் இவ்வரும் உதவியை அடிகளாரே நன்றிப் பேருணர்ச்சியில் பல கடிதங்கள் எழுதிப் பாராட்டினா ரென்றால் வேறு என்ன வேண்டும்!

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய திருவரங்கர் சென்னைக்கு வந்து, அங்குத் தம் திருசங்கர் கம்பெனியைத் தொடங்கி நடத்தியதும், தவத்திரு மறைமலையடிகளார் தமிழ்ப் பணி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டேயாகும். சென்னையில் இருப்பின் அடிகளாரோடும் நெருங்கிப் பழகவும் அவருக்கு அவ்வப்போது உதவவும் வாய்ப்புக் கிடைக்கும் எனக் கருதியே அங்குத் தங்கலானார்.

நெல்லையில் திரு. மா. திரவியம் பிள்ளை என்பவரோடு திருவரங்கரும் இணைந்து பங்குதாரர்களைச் சேர்த்துத்தக்க சட்டத்திட்டங்களோடு 1920இல் ‘திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இருவரும் இணைந்தே இப் பணியைச் செய்தார்களென்றாலும் திருவரங்கர் முயற்சியும் உழைப்புமே இதில் மேலோங்கி நின்றன. நெல்லையிலேயே தங்கிக் கழகப்பணியை இடை டையறாது செய்து கொண்டிருந்தார் திருவரங்கர்.

வருக்கு இல்லத்துணைவியாய் வாய்த்தவர் மறைமலை அடிகளாரின் திருமகளார் நீலாம்பிகை அம்மையார் ஆவர். நிறைந்த தமிழ்ப்புலமை தமிழ்ப்புலமை வாய்ந்த இவ்வம்மையார் தம் தந்தையாருக்கே தனித்தமிழ் எழுச்சியைத் தோற்றுவித்தா ரென்றால் இவரது தனித்தமிழ் ஆர்வத்தை எவ்வாறு புகழ்வது! அடிகளார் தனித்தமிழ் இயக்கம் கண்டு அதன்வழி நூல்கள் பல பார்த்து வெளிக்கொணர்ந்ததில் இவ்வம்மையாருக்கு மிகுந்த பங்குண்டு. அம்மையார் எழுதி வெளிவந்துள்ள தனித்தமிழ் நூல்களும், வடசொற்றமிழ் அகராதியும் தமிழுக்குக் கிடைத்த வைரமணிப் பேழைகள்! இவ்வம்மையார் ஆலோசனைகளும் திருவரங்கருக்கு மிகுந்த பயன் அளித்திருக்க வேண்டும்!

திருவரங்கர் ஒரு தனிமனிதராக நின்று தம் திறனாலும் முயற்சியாலும் ஆற்றிய பணிகள் நமக்கு வியப்பைத் தருகின்றன. இப்பணிகளிலிருந்து தமிழ்மொழி மீதும், சைவத்தின் மீதும் இவருக்கிருந்த ஆழமான பற்றினை உணர்ந்து கொள்ளலாம். தன்னிந்திய சைவசித்தாந்த சங்கம், திருக்குறள் தேர்வுகள், திருக்குற்றாலத்தில் சாரல் மாநாடு, நெல்லைத் திருநெறித்