உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

தொண்டர் குழாம், தென்னிந்திய தமிழ்ச்சங்கம், மெய்கண்ட சாத்திர மாநாடு, இசைத்தமிழ்க்கழகம் போன்ற எத்தனையோ அமைப்புகளும் நிகழ்ச்சிகளும் இவரது FT (h ணையற்ற திறமையை வெளிப்படுத்தும்.

ஈடு

தம் இளையவரின் திறனையும் செய்தொழில் நேர்த்தியையும் சிறந்த குறிக்கோள் தெளிவையும் நன்கறிந்தவர் திருவரங்கர். சென்னையில் கழகத்தின் கிளையமைப்பு ஒன்றைத் தொடங்கி அப் பொறுப்பைத் தம் இளையவரிடமே (திரு. வ.சு. பிள்ளையிடம்) ஒப்புவித்தார்.

வனப்புடையனவாய்

கழகம் தொடங்கிய காலத்திலிருந்து அஃது ஆண்டுக்கு ஆண்டு மிகுந்த நூல்களை வெளியிட்டுத் தம் வளர்ச்சியினைக் காட்டியது. தொடக்ககாலக் கழக வெளியீடுகளே கண்கவர் விளங்கின. மேலைநாட்டிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த நூல்களுக்கொப்பத் தமிழில் அச்சுத் தெளிவோடும், அழகிய கட்டுக்கோப்போடும், நாட்டுக்கும் மொழிக்கும் நலம் தரும் சிறந்த நூல்களைக் கழகம் வெளியிட்டு வந்தது. தரம் தாழ்ந்த நூல்களையோ, தம் குறிக்கோளுக்கு மாறுபட்ட நூல்களையோ கழகம் ஒருபோதும் வெளியிட்ட தில்லை. இவ்வமைப்பு நூன்முறை, அன்றுமுதல் இன்றுவரை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கழகப் பதிப்பு என்றால் அது சிறந்த பதிப்பு என்ற பொருளைத் தரும்படியாக நூல்கள் அமைந்து விளங்கின. அதுவே கழகச் சிறப்புக்கும் காரணமாயிற்று.

எத்தனையோ எழுத்தாளர்கள், புலவர்கள், கவிஞர்கள் ஆகியவர்களைத் தமிழ்மொழிக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை, திருவரங்கருக்குண்டு. புத்தம் புதிய நூல்கள், பழைய நூல்களுக்குப் புத்துரைகள், கற்றோரேயன்றி மற்றோரும் கற்றுப் பயன் அடையத்தக்க எளிய உரைநடைப் பதிப்புகள், சிறுவர் நூல்கள் போன்றவை வெளிவரத் தம் தம்பியாருக்கு இவ ரே உறுதுணையாக நின்று வழிகாட்டலானார்.

1934ல் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடத்தவும், சன்னை மாகாணத் தமிழர் சங்கம் அை அமைக்கவும் பேரறிஞர்களோடு திருவரங்கரும், அவர் இளையவர் திரு. வ.சு. திரு.வ.சு. பிள்ளையும் இணைந்து செயலாற்றிய பணிகள் குறிப்பிடத் தக்கவை. தமிழின் தூய்மையையும், இனிமையையும் பேணு வதற்கும், பிறமொழித் தாக்கத்திலிருந்து தமிழைக் காப்பதற்கும், தமிழ்ப் பாதுகாப்புச் சங்கம் அமைத்து அதன்வழி அறிஞர்