உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

5

பெருமக்களோடு கழகத்தின் இந்த இரட்டையர்களும் சேர்ந்து சய்த பணிகள் மறக்கற்பாலனவல்ல. கழக இதழாகிய செந்தமிழ்ச் செல்வியைத் தமிழ் வளர்ச்சிப் பணிக்காகவே பயன்படுத்தி வந்ததை யாவரும் அறிவர். இப்படி எத்தனை எத்தனையோ பணிகள். கழகப் பணியையே தம் முழுநேரப் பணியாகக்கொண்டு கழகத்தைக் கட்டாகக் காத்துப் பேணிவந்த திருவரங்கனாருக்குத்தான் எத்தனை சோதனைகள்! அவருடன் கழக அமைச்சர்களாக இருந்தவர்களே அவருக்கு எதிராக மாறி அவர் மீது வேண்டாத பழியைச் சுமத்தினார்களென்றால் இதனினும் துன்பம் தர வேறு என்ன வேண்டும்? தம்மீது சுமத்திய குற்றங்கள் அனைத்தும் தவறானவை என்பதைப் பங்காளிகள் கூட்டத்தில் தக்க சான்றுகளோடு இவர் மெய்ப் பித்துக் காட்டினார். பின்பு அனைவரும் இவரது நேர்மையை நன்கு தெரிந்துகொண்டனர். அத்தகைய செயல் முறையை அன்று இவர் மேற்கொள்ளாவிட்டால் இன்று கழகம் என்ற ஓர் அமைப்பே இருந்திருக்காது. அன்றிலிருந்து திருவரங்கர் ஒருவரே பங்காளிகளில் நம்பிக்கைக்குரிய அமைச்சராய் அமர்ந்து கழகப்பணியாற்றி வரலானார். நீண்டகால நண்பர்களும் திருவரங்கரை நன்கு அறிந்தவர்களும் அவருக்கு மாறுபட்டு முரண்பட்ட செயல்களில் ஈடுபட்டபோது, அவர் நெஞ்சம் கன்றிப்போனதில் வியப்பேதும் இல்லையே!

குடும்பத்திலும் துயரம் தரும் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. ஓய்வே இல்லாத உழைப்பும், மீண்டும் மீண்டும் வந்த மோதிய தொல்லைகளும், துயரங்களும் திருவரங்கர் உடல் நலத்திற்கு ஊறு விளைத்தன. அவர்தம் உயிரையே (1944இல்) கவர்ந்தன. ஆம், அவர் இன்று இல்லை. ஆனால் அவர் ஊன்றிய விதைகள் முளைத்து வளர்ந்து பல பயன்மரங்கள் கொண்ட பொழிலாகிக் கனிகளை உதிர்க்கின்றன. இக் கனிகள் தமிழ் மொழியின் சிறப்பாகவும், தமிழர் வாழ்வின் நலமாகவும், சைவத்தின் உயர்வாகவும் காணப்படுகின்றன. காலமெல்லாம் இக் க் கனிகள் உதிர்ந்துகொண்டே இருக்கும்.

வாழ்வெல்லாம் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர் நலனுக்கும் அயராது உழைத்த ஒரு மாமேதையின் வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பும் சுவையும் கொண்ட இனிய தமிழ்நடையில் எழுதியுள்ளார் புலவர் இரா. இளங்குமரனார். தமிழ் வளர்த்த செம்மலின் வரலாறு முழுமையும் தமிழ்மணம் கமழ்கிறது. நூலைப் படிக்கத் தொடங்கியதும் படித்து முடிக்கும் வரை