உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

உள்ளம் வேறு எதிலும் செல்லாத நிலைக்கு, இஃது ஈர்ப்புச் சக்தி காண்டு விளங்குகிறது. பல நிகழ்ச்சிகளை நம் கண்முன் நடப்பனபோல் ஓவியப்படுத்திக் காட்டும் ஆசிரியர் திறன் பாராட்டுதற்குரியது.

இவ் வரலாற்றைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றோர் இ வரலாற்று நாயகரைப்போல் தாமும் ஆக வேண்டும் என அவாக் கொள்ளுதல் இயல்பு. நல்லுள்ளமும் நயக்கும் குறிக்கோளும் காண் வர்கள் பொதுமைப் பணியிலன்றோ சிறப்பைக் காண்பர். அச் சிறப்பையன்றோ வாழ்க்கையில் தாம் பெறும் உண்மையான வெற்றி என்றும் கொள்வர்? அவ் வெற்றியினை விளக்கிக் காட்டும் ஒரு சிறந்த நூலே இது.

76, ஆரிங்டன் சாலை,

சென்னை 31.

-

}

(ஒம்) பா. நடராசன்

6-6-82