உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

மெய்வந்த மொழிப்பெருமை விலைமதியா

நெறிப்பெருமை வேறுள் ளாரும் கைவந்து கற்பதற்கே கவினுறநீ

கருதிமிகக் கடிதில் தந்தாய்.

இவ்வுலகு தனைநீத்தே இறையடியை

எய்தியநின் எழில்சேர் ஆவி செவ்வியசெவ் வேட்பரமன் திருவடிக்கண்

நனிபொருந்தித் தீமை யின்றி மைதவழும் கண்ணாளாம் வள்ளிமண வாளன்தன் மலர்ப்பொற் றாளின் எவ்வுலகுங் கண்டின்ப மெய்துகவென் றேத்தினனால் இன்பார் நண்பா.

149

புகழ். முத்துசாமிப் பிள்ளை, உடன்குடி

திருவரங்கம் பிள்ளையெனும் செல்வா! நீ பாரில் மருவுபல நூல்களையும் மாண்பார் - திருவிளங்க அச்சடித்த தல்லாமல் அவ்வுலக நூல்களையும் வைத்தடிக்கச் சென்றாயோ மன்.

- S. A.இராமசாமி,

ஆசிரியர், செந்தமிழ்ச் செல்வம்.

திருவரங்கம் தமிழர்அங்கம் துடிது டிக்கச் சீரியற்கை யாம் அரங்கம் சேர்ந்திட் டாரோ பெருவரங்கம் தமிழ்க்கென்று பேசும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நாடி வருவர்அங்கம் எனப்படுமோ! வையம் வாடி

வண்தமிழ்நா டுற்றமறை மலைஎம் அண்ணல் ஒருவர்அங்கம் தம்மருகர்க் காக நொந்தால்

உயர்தனிச்செந் தமிழணங்கும் உயிர்நை வாளே!

மலைவிளக்காய்த் தமிழகத்து வீற்றி ருக்கும் மறைமலைப்பே ரடிகட்கு மகளா ராய்,நற் கலைவிளக்காய்த் ‘தனித்தமிழே இயங்கும்' என்னும் காட்டுக்கோர் அணையாத விளக்காய் எங்கள்

நிலைவிளக்க உடன்பிறந்தா ராய்அ மைந்த

நீலாம்பி கையாரின் உளத்தில் இந்நாள்