உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

இலைவிளக்கென் றாயிற்றோ திருவ ரங்கர் இருப்பரெனில் இறப்புலகு சிறப்பெய் தாதோ?

கமழ்சைவ சித்தாந்த நூற்ப திப்புக்

கழகத்தின் கண்ணான திருவ ரங்கர் அமிழ்வித்து நமைத்துயரில் சென்றார் ஆதல்

அருந்துணையைப் பெருந்தமிழ்த்தாய் இழந்தாள்; மேலும் திமிர்இந்தி போக்கற்குச் சிறையும் சென்ற

செழியுமறைத் திருநாவுக் கரச ரென்னும் தமிழ்காத்தார் மைத்துனரை இழந்தார் நாமும்

தலைசிறந்த தோழரையே இழந்தோம் அன்றோ! செந்தேனும் பொற்குடமும் எனமேல் நாட்டார் திகழ்நூலும் அழகுமென வெளியிட் டார்கள் நந்தமிழ்நூல் அதனினும்பன் மடங்காய்த் தோன்ற நன்றுழைக்கும் கழகத்தின் முகவ ரான முந்தறிஞர் சுப்பைய னாரோ தம்மில்

மூத்தவராம் திருவரங்கர் தமைஇ ழந்து பைந்தமிழ்நூற் கழகத்தின் அமைச்சை யுந்தாம் பறிகொடுத்தால் அவர்நெஞ்சு பதைத்தி டாதோ. வெல்வேலும் மறைவதுவோ! படைவீ டிந்நாள் வில்லைத்தான் இழப்பதுவோ! தமிழ்எ திர்ப்போர் சொல்வேலி னால்எதிர்த்துச் சோர்வு பெற்றும் சூழ்ச்சிவேல் எறிகின்ற இந்நாள், எங்கள் நெல்வேலித் திருவரங்க மறவர் தம்மை

நெடுந்தமிழ்நா டிழப்பதுவோ! அவரின் உற்றார் பல்லோர்க்கும் யாம்கொண்ட உடன்துன் பத்தைப் பகர்கின்றோம்! திருவரங்க னார்பேர் வாழி.

-

பாரதிதாசனார்.

எழுத்தியலும் சொற்பொருளும் நடையழகுந் தனித்தமிழுக் கியன்ற வாபோல்

வழுத்துபிற மொழிக்குளதோ? எனல்மானத் தமிழ்மொழியில் வாய்ந்த நேயம்

பழுத்தநிலை திருத்தமுறப் பதிப்பளித்தான் உயர்ந்தகலை பாலித் தானென்