உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

155

தமிழறிவுக் களஞ்சியம் கொள்ளை போயிற்றா? பெண்கள் குல விளக்கு அணைந்துவிட்டதா? செந்தமிழிற் பேசி எழுதி இனிமை புகட்டிய அம்மையாரின் வாழ்வுக்கும் அழிவு நேர்ந்ததா? ஈடு செய்ய வெண்ணாத இழப்படைந்தான் தமிழன்னை! பேணித் தமிழறியும் பெருமாட்டி நீலாம்பிகையின் பிரிவுத்தீ எளிதில் ஆறக் கூடியதன்று.

தந்தையோடன்றித் தாயையும் பிரிந்து தவிக்கும் தமிழ்க் குழந்தைகளும் தமக்கையுன் பிரிவால் வாடும் தம்பியரும் தாங் களும் ஆச்சியும் இனி எவ்வகையில் ஆறுதல் அடைய முடியும்? புத்தனேரி ரா. சுப்பிரமணியன், சென்னை.

தமிழணங்கைப் போற்றிவந்த செவிலித்தாய் அன்ன அம்மையார் தமது புகழுடம்பைச் செந்தமிழகத்திருத்தித் தமது நாயகரைத் தேடி இத்துணை விரைவில் செல்வார் என யாரே நினைந்திருப்பார்! அஃது அவ்வம்மையாரின் நாயக பத்தியையும் திருவருளின் சக்தியையும் புலப்படுத்துகின்றன. இவ் வுண்மை தெரிந்து நாம் ஆறுதல் அடைய வேண்டும். எங்கள் ஆசான் திரு. மறைமலையடிகள் இந் நிகழ்ச்சியைப்பற்றி உளச் சோர்வு பாராட்டாதிருக்கத் திருவருளை வேண்டுகின்றேன்.

-

இராவ்பகதூர் வ. சு. செங்கல்வராயபிள்ளை எம். ஏ., சென்னை.

தங்கள் தமையனார் மறைவினால் ஏற்பட்ட விசனம் மாறுமுன் வ்வாறு நிகழ்ந்தது வெந்த புண்ணில் வேல் நுழைந்ததை ஒத்துளது. பெரும் புலமை வாய்ந்த ஆடவரையும் மகளிரையும் யமன் இவ்வாறு நியாயமின்றிக் கொண்டுசென்று விட்டால் தமிழுலகத்துக்கு என்ன நன்மை விளையக்கூடும்?

- செல்வி இராசாமணி அம்மையார், எம்.ஏ., எல்.டி.,

சென்னை.

புராணங்களிலே படித்தோம் ஔவையாரையும் மங்கையர்க் கரசியாரையும் மற்றும் பல திலகங்களையும் நேரில்கண்டு மகிழ நம் அம்மையார் இருந்தார்கள் அவர்களின் பிரிவு தமிழர் அனைவருக்கும் பெருங்கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.

-

டாக்டர் ப. சிற்சபை.

காஞ்சிபுரம்.