உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

தமிழ்த்தொண்டு செய்யும் பெண்மணிகள் தமிழ்நாட்டில் மிகச் சிலரே. அவர்களுள் சிறப்பான தொண்டு புரிந்து தம் வாழ்வைத் தமிழ் வாழ்வாகப் பண்ணிய திருவாட்டி நீலாம்பி கையம்மையார் இன்னும் பல தொண்டுகளைச் செய்யக்கூடியவர். அதற்கு இடமின்றி இறைவன் தம் இணையடியிலே சேர்த்துக் கொண்டது திருவருள்போலும்.

கி.வா.ஜகந்நாதன், சிரியர், கலைமகள்.

சகிக்கமுடியாத துன்பச் செய்தியைத் தினமணியிற் கண்டேன். துடிதுடித்தேன். ஒன்றும் எண்ணவே முடியாத நிலையை அடைந்தேன். ஆறு பெண் குழந்தைகள் எப்படி அலறித் துடித்து அழுகின்றனவோ? பட்டகாலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்னும் பழமொழிக்கு நாம்தாமே எடுத்துக்காட்டாக இருக்கின்றோம்.

நேற்றுக் காலையில்தான் அம்மையார் எழுதிய எலிசபெத் பிரை பெருமாட்டியார் புத்தகத்தை முழுவதும் படித்தேன்! காலை எட்டரை மணிக்கு எடுத்துப் பத்தேகால் மணிக்கு முடித்தேன். செந்தமிழ் நடை அடியேனை இழுத்துக்கொண்டே போய்விட்டது. இன்று அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கடிதம் எழுத எண்ணினேன்! அக் கடிதம் வேறு வகையாக எழுத நேர்ந்தது.

வா. தி. மாசிலாமணி முதலியார். இந்துமத பாடசாலை, வாலாசாபாத்.

அன்பே உயிராய், அருளே யாக்கையாய் விளங்கிய அம்மணி, கூரிய அறிவும் சீரிய கல்விப் பயிற்சியும் பெற்றுத், தனித்தமிழ் உணர்ச்சியும் சமய வுணர்ச்சியும் தமிழ்நாடெங்கும் பரப்புதற்கு முன் வந்த அம்மையார் மறைவு தமிழ்நாடு செய்த தவக்குறையே.

பல்கலைக்

மா. சரோஜினி, சேத்துப்பட்டு.

குரிசில் திரு. கா. சுப்பிரமணியபிள்ளை முதலான பேரறிஞர்களால் நன்கு மதித்துப் போற்றப்பெற்ற வரும், ஈரோடு வே. இராமசாமியார் அவர்கட்குப் ‘பெரியார்’