உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

தனித்தமிழ் வெறியையும்

157

என்ற பீடுறு பெயரைப் பேரன்போடும் தன்மதிப்போடும் வழங்கியவரும், சென்னை நார்த்விக் மகளிர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராய் இலங்கியவரும், தமிழகத்தில் தனித்தமிழ் மக்களிடத்தில் பற்றையும் உண்டாக்கியவரும், தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து ஊன் கலந்து உயிர்கலந்து இனிக்கும் செவ்விய தனித் தமிழ்ச் செந்தமிழ் நடையில் தனித்தமிழ்க் கட்டுரைகள், முப்பெண்மணிகள் வரலாறு, சோன் வரலாறு, வடசொற்றமிழ் அகரவரிசை முதலான தனிச் செந்தமிழ் நூல்களின் கணக்காயரும், கோப்பெண்டு, ஒளவையார் முதலான சங்ககாலப் பெண்பாற் புலவர்களைப் போன்ற அறிவாற்றலும், செந்தமிழ்த் திறனும் மனைமாட்சியும் ஒருங்கே யுடையவரும், குழலினும் யாழினும் இனிய தமது குயிற் குரலால் ஆன்றவிந் தடங்கிய ஆன்றோரின் ன்றமிழ்ச் செய்யுட்களைப் பாடி அம்மையப்பரைப் போற்றும் அருமையரும்,

உளத்தாலும் உரையாலும் செயலாலும் நற்றமிழிற்கு நற்றொண்டு புரிந்த நங்கையாரும், தமிழ்த் தகைமை யெல்லாம் ஓருருவாய்த் திரண்டு தமிழகத்தில் தமிழினத்தில் இருபதாம் நூற்றாண்டில் பெரும்புலமையுடன் மிளிர்ந்த பெருமாட்டியும் உலகமக்கட்கு எடுத்துக் காட்டாக விளங்கிய வரும், நினைக்க நினைக்க உணர உணர உள்ளத்தை நெய்யாய் உருகவைக்கும் இயல்புகளும், மொழியும் தொண்டும் உடை ய உயர்பெரும் அம்மையும் ஆகிய செந்தமிழ்ச் செல்வியார் திரு. திருவரங்க நீலாம்பிகை அம்மையாரவர்கள் பிரிவு தெரிந்து யானும் உளம் வீங்கி உறுங்கவல்கொண்டு இடுக்கணுற்றேன், கண்ணீருங் கம்பலையும் கொண்டேன்.

வித்துவான் வை.பொன்னம்பலனார், வேலூர் (சேலம்)

தமிழன்னை தன் பெண்டிற்குரிய தோழியருள் ஒருவரை இழந்தாள். உரைநடையுலகம் தன் வளர்ச்சிக்குத் துணைசெய்யும் தையல் நல்லாரையிழந்தது; விருந்தினராய்ச் செல்லும் எம்மனோர் தம்மையேற்றுப் புரந்தருவாரை இழந்தனர்; தாங்கள் உடன்பிறந்த அண்ணனை இழந்த இழப்பு மறப்பதற்கு முன் அண்ணியாரை இழந்து வருந்துகின்றீர்கள். அவர்கள்