உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

மக்கள் பெற்ற தாயை இழந்து பேதுறுகின்றனர். இதுகண்டு வருந்தும் அறிஞர் உலகம்.

வித்துவான் ஔவை. சு.துரைசாமிப் பிள்ளை, அண்ணாலை நகர்.

தம் அருமைக் கணவனாரைப் பிரிந்த துயரமே அம்மையார் ஆருயிரை அலைத்து வந்திருக்கிறது. மக்களைப் காப்பாற்ற வேண்டும் கடமையுணர்ச்சியால் தளருமேனியைத் தைரியத்துடன் தாங்கிக் கடனாற்றி வந்தார்கள். அந்தோ! அறிவுக் களஞ்சியமாயும், அருந்தமிழ்க் கணிகலமாயும் தமிழ்ப் பெண்கட்கோர் தனிப்பெருந் தலைவியாயும், ஒழுக்கச்சுடர்க் கொழுந்தாயும் விளங்கிய இவ் வம்மை நரைமூதாட்டியாய் இக் கால ஔவையெனப் பன்னெடுங்காலம் இம் மண்மிசை வாழ்ந்து மக்களை மாண்புறச் செய்வார் என்று நினைத்திருந்தேனே! மறைந்து விட்டார்களே!

வ்

- ச. சச்சிதானந்தம் பிள்ளை, பி. ஏ., எல். டி.,

வேலூர்.

செந்தமிழ்நாடு தன் உயிர் அன்னையை இழந்துவிட்டது. கற்புக்கரசி செந்தமிழ்ச் செல்வி, என் அருமைத் தோழி காரைக்கால் அம்மையாரைப்போல் இறைவன் திருக் கரத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பாள்.

ஆண்டாளம்மாள், திருவல்லிக்கேணி.

இவர் பிரிவு மக்களுக்கும் உறவினருக்கும் மட்டுமா இன்னலை விளைவித்துளது? தமிழன்னை அணியை இழந்தனள். மாணவர் செந்தமிழ் நூல்களை இழந்தனர். பெண்ணுலகம் உயரிய பெட்பை இழந்தது. நினைக்குந்தோறும் மனம் பெரிதும் வருந்துகின்றது.

பண்டிதை எஸ். கிருஷ்ணவேணி, திருவல்லிக்கேணி.

தமிழர் செய்த தவக்குறைவு இவர்கள் போன்ற கலைச் செல்வப் பெண்மணிகளை இளமையிலேயே துறக்க நேர்கின்றது. தமிழர் செய்த பாவம், தமிழ்த்தாய் செய்த பாவம்! அந்தோ! இவர்கள் இழப்பு தமிழ்நாட்டு உயர்கலை இழப்பென்றே