உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

159

எண்ணுகின்றேன். பலகூறிப் பயனென்னை? கலை விளக்கம் அவிந்தது; தனித் தமிழுரை சாய்ந்தது; பெண்ணருங்கலம் பிரிந்தது; அறிவுக்கடல் வறண்டது. ஆ! ஆ! அம்மையார் நீலாம்பிகையார் பிரிந்தார்! தமிழணங்கின் சாயலன்ே றோ ஒழிந்தது!

செ. ரெ. இராமசாமி, பாகனேரி.

தமையனாரவர்களைப் பிரிந்த துயரம் தீர்வதற்குள் இவ்வளவு விரைவில் கனம் அண்ணியாரும் பிரிந்த செய்தி அறிந்து பெருந்துயரம் அடைந்தேன். குழந்தைகளின் நிலையை நினைத்தால் துயரம் இன்னும் மிகுதியாகிறது.

பரலி சு.நெல்லையப்பர்,

சன்னை.

அம்மையாருடைய அரும்பண்புகளும் உயரிய கல்வித் திறனும் உலகம் அறிந்ததே. அம்மையார் தம் மனையில் எனக்குச் சில ஆண்டுகளின் முன்பு ஊன் அளித்து விருந்து ஓம்பின அன்பை என்றும் மறவேன். வாழ்க்கைத் துணைவர் பிரிந்த சிறிது காலத்தில் அம்மையாரும் அருமை மக்களை விட்டுப் பிரிந்தது மிகத் துயரம்! அந்தோ மிகத் துயரம்.

இராவ்பகதூர் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார்,

கோவை.

இந்தி எதிர்ப்பிலே தமது திறமையைத் தமிழகத்திற்குக் காட்டிய திருவாட்டி நீலாம்பிகையம்மையின் தொண்டைத் தமிழகம் என்றும் மறவாது. அம்மை இறந்த செய்தியைக் கேட்டுத் தமிழ்மகன் ஒவ்வொருவனும் துடிக்காதிருக்க முடியாது.

இரா.சண்முகன், செயலாளர், மாணவர் கழகம்,

போத்தனூர்.

அண்ணனின் பின் குழவிகள் பலரையும் தவிக்கவிட்டு அண்ணியையும் அழைத்துக் கொண்டது மிகக் கொடுமை என்று தான் கூறுவேன். சிறார்களை நினைக்குங்கால் என்னுள்ளம்