உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

புழுங்கு கின்றது. வள்ளுவரோடு சேர்ந்து 'கெடுக கடுக இவ்வுலகி யற்றியான்' எனச் சூளுரைக்கவும் வெதும்புகின்றது.

டாக்டர் முத்து நமச்சிவாயம்,

சேலம்.

தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழ்நாட்டிற்கும் அல்லும் பகலும் உழைத்து அதனாலேயே உடல்நலிந்து உயிர் நீத்த உயரிய இரு தமிழ்த் தொண்டர்களின் குழந்தைகளைப் பாதுகாக்கத் தமிழ்நாடு முன்வரின் நன்றியுள்ள செயலாகும். ஏன் இந்தக் குடும்பத்தைக் காக்க ‘நீலாம்பிகையார் நிதி' என்று ஒன்று துவக்கக் கூடாது?

-

R.பாலகிருஷ்ணன் (இளங்கண்ணன்) பி.ஏ., எல்.டி.,

அந்தோ! தமிழுக்கே உழைத்த குடும்பத்திற்கு இதுவோ முடிவு! இவ்வாறு துன்பம் நேருதல் தகுமோ? இதுவும் இறைவன் திருவுள்ளமாமோ?

இராவ்சாகிப் கே.கோதண்டபாணி பிள்ளை

இரங்கற் பாக்கள்

பட்ட காலிலே படுமெனும் பழமொழிப் பட்ட வரங்கனார் பத்தினி பிள்ளைமைப் பட்ட வெண்மரை விட்டிறந் துண்மைகைப் பட்ட போதியான் பட்டதை யென்சொல்வேன்! தனித்தமிழ் இயக்கினைத் தாங்குவார் தம்மையே தனிப்பட வளைத்தனன் தகையில் கூற்றுவன் இனித்தமிழ் என்னிலை எய்து மோவெனப் பனிப்பவர் தீக்குறி பார்ப்ப தற்கிதோ!

புதுவதே யன்றுயிர் போல தியல்பென முதுவரும் முன்னரே மொழிந்த துண்மையால் இதுவரை யிருந்தமைக் கிறையை யேத்தியே கதுமென யாஞ்செயுங் கடமை முற்றுவோம்.

சேலம், வித்துவான் ஞா. தேவநேயன், M. O. L.