உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

நீலாம் பிகையும் நிமலனடிப் பட்டனள் கால னழைக்கக்கை விட்டனன் மருத்துவன் பாவலர்கள் பாலைகள் எண்மருந் தவிக்கவே. வாணி வரம்பெற்ற வாணினி மறைந்தனள் ஆணித் தரமா அநேகநூல் இழைத்தவள் பேணினள் தமிழைப் பிரியத் துடனே.

என்னினிய இளவலென எவருங்கண் டுளங்களிக்க இனைந்தே எங்கும் முன்னுபொருள் வளம்பெருக்கி முத்தமிழும் வளர்த்தமூ தறிஞன் நண்பன் தன்னிகரில் தாளாளன் திருவரங்கம்

எனும்பெயர்க்கே தமைகை சான்றோன்

மன்னவரும் வியக்குமுறை மாநாடு பலநடத்து வண்மை மிக்கான்.

மூவாறிற் குறையோராண் டில்வாழ்க்கைச்

சகடூர்ந்து முதிர்ந்த பண்பால்

பாவேறு புலவரகம் பரிந்துபுகு

கலைவல்லான் பாரில் எங்கும்

சாவேறு தாள்வேறென் றறைதுணிபான்

உயர்வாகச் சார்ந்த மக்கள் தாவேறு தலையறியாச் சமனாட்சிச்

சிவநெறியன் தண்மை சார்ந்தோன்.

மண்பிரிந்த மதியிரொன்பான் நிறைதலுமைப் பசியிருபான் மதிநாள் மக்கள்

கண்பிரிந்த நீர்பெருக்கக் கடியவாண்

டினள்மாமி கலங்கி ஏங்கப்

பண்பிரிந்த பாட்டொலிபோல் பகரெம்பி

சுப்பையன் பரிவுற் றேங்க

எண்பிரிந்த வளைப்போல எய்தினைவிண்

எமர்துன்பம் இயம்பப் போமோ?

மக்களொரு பாற்புலம்ப மாமியொரு பால்லற ஒக்கலெலாங் கூடி ஒலிபெருக்க-மிக்கதமிழ் அன்னை இரங்க அலுவலகத் தார்புலம்ப என்னைநீ லாபிரிந்தாய் இங்கு.

161

திருச்சி வித்துவான் பு.சி.புன்னைவனநாத முதலியார்.