உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

திடுக்கிட்டேன் தீச்செய்தி திருநீலாம் பிகையம்மை சென்றா ரென்றே நடுக்குற்ற மொழிகண்டேன் நலிவுற்றேன் உளம்நைந்தேன் நாளை நொந்தேன் உடுக்கையிழந் தவர்கைபோல் உயர்தனிச்செம் மொழித்தமிழ்க்கே உரைநூ லாற்றிக் கொடுக்கும்கலை மகளிவர்போல் புலவர்கொளு நாள்நினைந்தேன் கொண்டேன் துன்பம். என்அன்னை தமிழ்வளர்த்தாள் எழில்நலமார் உரைநடைநூல் இயனூ லணியாய்த் தன்நிகரில் தமிழ்ச்சொல்லால் தந்தபெருங் கலைச்செல்வி தமிழ்ப்பே ரன்பால் முன்னுற்ற திருவரங்கர் பொன்னாட்டில் தமிழ்த்தொண்டில் முயல எண்ணி அன்புற்றே அழைத்திடவே அருமைமக்கள் உறவுமற்றும் மறந்தாள் என்னே! மறைமலையின் மகளாகித் திருவரங்கர் துணைபற்றி மதிபெற் றோங்கி நிறைதமிழால் உரைநடைநூல் தமிழ்நிலத்தில் பயிராக்கி நிலைத்த புகழின்

குறைவுபடாத் தமிழ்ச்சொல்லால் வடசொல்லின்

துடுக்கடக்கிக் குறையாக் கல்வித் துறைபயில்நீ லாம்பிகையார் விண்ணுற்றார்

மண்வாழ்நர் துயரே பூண்டார்.

ஈரோடு சிவ. குப்புசாமிப் பிள்ளை.

செந்தமிழ்க்கோர் தாயகமாம் செல்விதிரு நீலம்மை பந்தமறுத் துன்றனடி பற்றினளே - எந்தமது அன்னை தமிழ்மொழிக்கிங் கியாரே புகலாவார்

பொன்னேன் சடிலாய் புகல்.

தூத்துக்குடி சித்தாந்த ஆசிரியர் சிவகுருநாத பிள்ளை.

ஏழா றாண்டுகள் கழிந்தது மரங்கனை ஏழெட்டு மாதமாக் காணாக் குறையால் ஊழி நோயுற யூழ்த்துணை யேகினள், நண்பர்கள் பலரையும் நீங்கிய பண்டிதை