உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

பண்டிதர் தந்தையைப் பிரிந்த தெங்ஙனம்? கண்டவர் கேட்டவர் கடுந்துயர் எய்தவே.

-

163

மு.சி.பூரணலிங்கம் பிள்ளை பி. ஏ., எல். டி.

தமிழருந் தாய்மறந் தார்தமிழ்த் தாயுந்தன் சேய்மறந்து தமிழருந் தாய்இல ரோவென நின்ற நிலையிடையே தமிழருந் தாய்அருந் தாய்என ஊட்டிய தமிழுருந்தாய் தமிழருந் தாய்இல ரேஎன நீத்தெமை ஏகினளே! விழுத்தகு மெய்த்தமிழ் நன்னிலை காட்டி அறநெறிக்கே இழுத்தவம் மெய்த்தவன் வண்டமிழ் ஏந்தல் மறைமலையின் முழுத்தமிழ் ஆர்வம்மெய் யுருப்பெற வந்துமூ வாததமிழ் பழுத்துரு காஅனை யாய்பழி யேமைவிட் டேகினையே! உடன்பிறந்த தார்எண்மர் சேயர்நின் றார்இவண்; நின்னறிவுக் கடற்பிறந் தார்எண்ணி லாதவர் சேயர்நின் றார் இனும்பின் னிடப்பிறந் தார்இளஞ் செல்வர்நின்றார் நின்நன் னூற்றொகுதிக் கடற்புரந் தார்இவண் நின்றனர் என்கடந் தேகினதே.

செந்தமிழ் நந்தமி ழாக்கிய சேவகன் தந்தைமுறை; வந்தமிழ் தாமறை வரையற எங்கும் வழங்குபுகழ்

நந்தமிழ் வள்ளல்நின் வாழ்துணை யாம்முறை; நலிந்திங்ஙனே நொந்தமிழ் வேமும்நின் சேய்முறை யோஎன நீத்தனையோ? கல்லா லொருமலை பல்லா வரமதன் புடையறிவுச் சொல்லா லொருமலை துன்னிய தென்ன இருந்ததவன் நல்லா றதன்பய னாகிய நல்லா றெனவெழுந்தோய்! தொல்லா றிதுவெனக் காட்டுவ தாரினித் தோமறவே! சீலக்கண் கொண்டேநம் செந்தமிழின் செல்வமெலாம் ஞாலக்கண் காட்டிய மெய்ஞ்ஞானத் திருவுருவே! நீலக்கண் ணம்மேநீ நீத்தனையேல் எம்மையிங்கே மாலக்கண் நீக்கியெமை மகிழ்விப்பார் யாரினியே.

வித்துவான் கா.அப்பாதுரைப் பிள்ளை எம். ஏ., எல். டி., முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்.