உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காதல் அரும்புதல்

துணைத்

வணிக நிறுவனப் பணிகளின் இடையே தொழிலாக அன்றோ அரங்கர் திருசங்கர் கம்பெனி ருசங்கர் கம்பெனியை நிறுவிக் கடனாற்றினார். அதன் செயற்பாடும் பயன் விளையும் அரங்கர் உள்ளத்தில் ஊன்றின. அத் தொழிலையே தம் வாழ்வுத் தொழிலாக கொள்ளுதல் சிறக்குமெனக் கருதினார். அதே பொழுதில் தம் வாழ்வை தாய்த் தமிழகத்துக்கு மாற்றிக் கொள்வது நலம் என்ற முடிவுக்கும் வந்தார். அதற்கு அடிப்படை அடிகளார்க்கு அணுக்கமாகியிருந்து அவர் பணிக்கு ஒல்லும் வகையால் எல்லாம் உதவக்கூடும் என்பதாகவே இருந்தது. ஆகலின் திருசங்கர் கம்பெனியைச் சென்னையில் நிறுவிச் சயலாற்றுதற்குத் துணிந்தார். அத் துணிவிற்கு நெஞ்சின் அடித்தளத்தில் ஓர் உணர்வும் இருந்தது போலும்!

திருவரங்கனாரின்

கெழுதகை நண்பர் செந்தில் ஆறுமுகம் அவர்களைப்பற்றி முன்னரே அறிவோம். அவர் ஒருகால் பல்லாவரத்திற்கு வந்து அடிகளாரைக் கண்டு அளவளாவிச் சென்றார். சென்றவர் அடிகளாரின் அன்பு மாண்பையும், அவர் தம் இல்லத்தார் விருந்தோம்பு தலையும், அழகே வடிவெடுத்து அறிவான் முதிர்ந்து விளங்கும் நீலாம்பிகை என்னும் அடிகளார் தம் அருமைச் செல்வியர் தனிப் பெரும் சீர்மையையும், அடிகளார் அம் மகளார் மாட்டுக் கொண்டுள்ள தனிப் பேரன்பையும், இன்ன பிறவற்றையும் அரங்கர் திருச் செவியில் சேர்த்திருந்தார். அரங்கர் உள்ளத்தில் நீலாம்பிகை என்னும் பொற்கொடி மின்னலிடத் தொடங்கியது. ‘அடி களார்க்கு அன்பு மருகராய் அமையும் பேறு வாய்க்குமோ!' என்று தமக்குள் வினாவி, “அடிகளார் காட்டி வரும் பேரன்புப் பெரு வெள்ளப் பெருக்கில் நீந்தும் பேறு வாய்த்த எளியேன் மருகராம் பேறு எய்தலும் கூடுவதே” என்று அமைந்து தாய்த் தமிழகம் நோக்கினார்.