உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

39

திருவரங்கர் தமிழகத்தில் நிலையாய்த் தங்கும் திட்டத்துடன் வந்தார். கொழும்பில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து பாளையங் கோட்டைக்குச் சென்றார். தம் அருமை அன்னையாரையும், உடன் பிறந்தார்களையும் கண்டு உவகை கூர்ந்தார். சின்னாள்கள் சென்று, சென்னைக்குப் புறப்பட்டார். தம் மேற்கொண்ட தொழில்பற்றி அடிகளாரிடம் கலந்து உரையாட வேண்டுமே! அவர் கருத்தறிந்து நிறுவனத்தைத் தொடங்கி நடத்த வேண்டுமே! நேரே பல்லாவரத்திற்குச் சென்று அடிகளாரை அவர்தம் வளமனையில் கண்டார். கண்ட காட்சி எப்படி? வரவேற்பு எப்படி? உடனிருந்து கண்ட அடிகளார் செல்வர் உரைக்கிறார் : அடிகளின் நல்வாழ்விற்கு உயர் தொண்டிற்கு உயிராய்

66

நின்று உதவிய வானனைய வள்ளலார் திருவரங்கம் ஒரு நாட்காலைப் பொழுது (9-11-1918) நாங்கள் யாவரும் ஆரா வேட்கையுடன் எதிர்பார்த்து இருந்தபடி பல்லாவரம் வந்து சேர்ந்தார். அவரை வரவேற்று மகிழ்வதில் எங்கள் குடும்பம் அப்பரை வரவேற்ற அப்பூதியடிகள் குடும்பத்தையும் மிஞ்சிவிட்டது. திருவரங்கரைக் கண்டு நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவரைப் போற்றுவதில் ஒருவர்க் கொருவர் முந்தினோம். அடியார்க்கு அடியாராக யாரும் விரும்புவர் அல்லரோ! என் அன்பான பெற்றோர்கள் அவருக்கு வ வகை வகையான விருந்தூட்டி மகிழ்ந்தனர். திருவரங்கருக்கு அப்போது ஆண்டு 28. பரந்த திருமுகமும், திருநீற்றினால் நிறைந்த பரந்த நெற்றியும், அகன்ற பெரு விழிகளும், உயர்ந்தகன்ற மார்பும், கல்லனைய தோளும் தாளும் கொண்டு கட்டமைந்த காளையாக் கவின் பொழியும் மேனியராய்த் திருவரங்கர் இலங்கினார்." (மறைமலையடிகள் வரலாறு. 324)

நீலாம்பிகையார்க்கு அப்பொழுது அகவை பதினாறு. இளமையின் வளமும் அறிவுன் பொலிவும் கொண்டு எழில்மிகு நங்கையாய் விளங்கினார். நாகையைச் சார்ந்தவர் அல்லரோ அடிகளார்? ஆதலால் நாகையில் கோயில் கொண்ட அம்மையின் திருப்பெயரைத் தம் மகளுக்குச் சூட்டினார். நீலாம்பிகையார் ஞு6-8-1903இல் பிறந்தார்.

நீலா தொடக்கப் பள்ளிப் படிப்பை சென்னையிலும் பல்லாவரத்திலும் பயின்றார். பல்லாவரத்தில் அதற்கு மேற்பட்ட வகுப்புப் பள்ளி அக் காலத்தில் இல்லாமையால் அவர் பள்ளிப் படிப்பு அவ்வளவில் நின்றது!