உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

படிப்பு, பள்ளியில் மட்டும் பயிலப் பெறுவதோ? அதற்கு டமேது? காலமேது? ஆர்வம் இருந்தால் எங்கும் என்றும் கற்க வாய்ப்பு உண்டே! உலகத்தைப் போலத் திறந்தவெளிப் பள்ளிக் கூடம் ஒன்று உண்டோ? அதிலும் அடிகளார்தம் அன்புச் செல்வியின் கல்விக்குப் பள்ளிக்கூடம் விடுத்தமை ஒரு தடையாமோ? மும்மொழி வல்ல அடிகளார் புலமை நலம் எல்லாம் நீலாவினிடத்துத் தங்கியது. அவர் தாமும் மும்மொழிப் புலமையும், இலக்கிய இலக்கணத் தேர்ச்சியும், திருமுறை திருமுறைத் திறமும் ஒருங்கே வாய்க்கப் பெற்றார். அடிகளார், தம் மக்களுள் நீலாம்பிகையார்க்கே ஆர்வத்தொடும் கற்பித்தார் என்பதும், பல்வேறு பணிகளுக்கு இடையேயும் காலமும் களமும் வகுத்து முறையே கற்பித்தார் என்பதும் கருதத்தக் கனவாம்.

அடிகளின் குரலோ தேனினும் இனியதாம்! நீலாம்பிகையின் குரலோ அதனினும் இனியதாம்! யாழும், குழலும், குயிலும் நீலாம்பிகையின் குரலுக்குத் திறை செலுத்தல் வேண்டுமாம்! அடிகள் தோடி, பைரவி, ஆனந்த பைரவி, மோகனம், மத்தியமாவதி, சங்கராபரணம், நீலாம்பரி முதலாய இசைகளை நீலாம்பிகைக்குக் கற்பித்தாராம்!

1916ஆம் ஆண்டு! நீலாவுக்கு அகவை 13! அடிகளார்

வள்ளலார் பாடிய,

“பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப்

பெறுந்தாய் மறந்தாலும்

உற்றதேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை

மேவிய உடல்மறந்தாலும்

கற்றநெஞ்சங் கலைமறந்தாலும் கண்கள்நின்

றிமைப்பது மறந்தாலும்

நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சிவா

யத்தை நான் மறவேனே

என்னும் பாடலைப் பாடினார். பாடியதுடன் “நீலா, இப் பாடலில் ‘தேகம்’ என்றுள்ள வடசொல் ஒன்றனையும் நீக்கி, அவ்விடத்தில் ‘யாக்கை' என்னும் தமிழ்ச்சொல் பெய்யப் பெற்றிருக்குமானால் இச் செய்யுளின் ஓசையின்பம் எவ்வளவு மேம்பட்டதாக இருக்கும்! பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குறைகின்றது; அன்றியும் நாளடையில் தமிழில் தமிழில் கலந்த