உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

41

பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று அச் சொற்களுக்கு நேரே வழங்கி வந்த நம் அருமைத் தமிழ்ச்சொற்கள் மறைந்து விடுகின்றன என்றார். இவ்வுரை கேட்ட திருமகள் நீலா, அடிகளாரைப் பார்த்து, “அப்படியானால் நாம் அயல் மொழிச் சொற்களை நீக்கித் தனித் தமிழிலேயே பேசுதல் வேண்டும். அதற்கென முயற்சிகளைக் கைவிடாது செய்தல் வேண்டும் என்றார்.

அன்புத் தந்தையாம் அடிகளாரின் ஆர்வமும், அருமை மகளாம் நீலாவின் வேண்டலும் ஒன்றுபட்டு ஓர் இயக்கம் பிறந்தது. அதுவே தனித்தமிழ் இயக்கம். தனித்தமிழ் இயக்கம் எங்கே தொடங்கியது? அடிகளாரிடம் அல்லவோ தொடங்கியது! சுவாமி வேதாசலமாக இருந்தவர் ‘மறைமலையடிகள்’ ஆனால். அவர்கள் சமரச சன்மார்க்க சங்கம், ‘பொது நிலைக் கழகம்' ஆயிற்று. அவர் நடாத்திய ஞான சாகரம் ‘அறிவுக் கடல்' ஆயிற்று! அடிகளார் பேச்சும் எழுத்தும் தனித் தமிழ் அயிற்று! அத் தனித் தமிழ்த் திருவிளக்கை ஏற்றிய செல்வி நீலா என்னின், அவர் தனி ஒரு மகள் அல்லர்! அவர் ஒரு இயக்கம் என்பதே சாலும் அன்றோ!

இத்தகு நல்லியற் புலமை மெல்லியல் நங்கையார்தம், அறிவு திருவுரு ஆற்றல்களில் அரங்கர் எத்துணை ஈடுபாடு காண்டிருப்பார்! அடிகளார்மேல் ஆரா அன்பு அரங்கர் கொண்டதே, அவர்தம் அறிவு திருவுரு ஆற்றல்களால் அல்லவோ! அவ்வாறாக அவர்தம் அமிழ்த முளையாம் அம்பிகையை அடைதற்கு அரங்கர் உள்ளம் எத்துணை அவாவி இருக்கும்! நாளெல்லாம் பொழுதெல்லாம் அரங்கர் திருப்பெயர் கூறுதலும், அவர் தம் பண்பு நலம் பகர்தலும், அவர்தம் சிவனெறிச் சால்பும் செந்தமிழ்த் தொண்டும் விளம்புதலும், அடிகளார்மேல் அவர் கொண்டுள்ள அன்பு வெள்ளத்தையும் அவர்க்குச் செய்துவரும் உதவிப் பேற்றையும் அடிகளாரும் உடன் பிறந்தாலும் பிறரும் உரைக்கக் கேட்டுக் கேட்டுக் கிளர்ந்த உள்ளம், கரையற்ற காதலில் கவிந்து நிற்றல் உறுதியன்றோ! ஆகலின், நாவின் வேந்தர் அருளிய,

“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவர்க்கே பிச்சியானாள்

99