உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

என்னும் தேவாரத் திருப்பாடலின் திருப்பொருளாகித் திகழ்ந்தார். பேர் கேட்டும், பெற்றி கேட்டும், ஊர் கேட்டும் உவந்து உவந்து முதிர்ந்து முதிர்ந்து நின்ற காதல் நேருக்கு நேர் காணவும், உரையாடவும் வாய்க்கும்போது முழுமதி கண்ட அல்லி எனவும், செங்கதிர் கண்ட தாமரை எனவும் விரிந்து மலராதோ?

66

அரங்கனார் உள்ளமும் அம்பிகையார் உள்ளமும் 'தேனொடு பால் கலந்த’தெனக் கலந்தன. கம்பர் கூறுமாறு போல, இருவரும் மாறிப் புக்கு இதய மெய்தினார்” எனலாம். (பால. மிதிலைக். 37). “செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" என்றும் கூறலாம். (குறுந். 40).