உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. செந்தமிழ்க் களஞ்சியம்

அடிகளார் திருமனையில் அரங்கர் சின்னாள்கள் வதிந்தார். திருசங்கர் கம்பெனியைத் தொடங்குவது குறித்து ஆய்ந்தார். சென்னை பவழக்காரத் தெரு இரண்டாம் எண் (புதிய எண் 87) கட்டடத்தில் இருந்த தெருப் பக்கத்து அறையில் அதனைத் தொடங்கி நடாத்தினார். அரங்கரின் வாழ்வு சன்னைக்கு மாறியமையால் L மாறியமையால் அடிகளார் தொடர்பு மிக நெருக்கமாயிற்று. அடிக்கடி பல்லாவரத்திற்கு வந்து அடி களாரைக் கண்டு கலந்துரையாடிச் செல்லும் கடமையும் உண்டாயிற்று. இந்த இட நெருக்கமும், இனிய கெழுமிய தொடர்பும் அரங்கர்க்கும் அம்பிகைக்கும் உள்ளத்திற்கு விருந்தாய் அமைந்தன. அடிகளார், அம்பிகையின் அன்னையார், உடன் பிறந்தார் அனைவருக்கும் இருவரின் உணர்வொத்த உயர்ந்த காதல் நலம், புலப்பாடும் ஆயிற்று. சிலபல வாய்ப்புகளைக் கருதித் திருமண நாள் தள்ளிச் செல்வதாய் அமைந்தது.

அரங்கர் தம் ‘திருசங்கர் கம்பெனி' வழியாகச் செந்தமிழ்க் களஞ்சியம் என்னும் பெயரில் ஒரு திங்களிதழ் நடாத்துதற்கு விழைந்தார். அவ்விதழில் திங்கள் தோறும் அடிகளார் திருவாசக விரிவுரை எழுதுதல் வேண்டும் என்றும் விழைந்தார். விழைந்த ஒன்றை அரங்கர் செயலுக்கு கொண்டு வராமல் விடுவார் அல்லரே! ஆகலின் திட்டமிட்டவாறு இதழைத் தொடங்கி விட்டார். தொடங்கி மட்டுமோ? அவ் வெளியீட்டுக்கு உறுப்பினராக ஆயிரவரைச் சேர்த்தும் விட்டார்! அயரா முயற்சி எதனைத்தான் ஆக்காது?

-

ரூ

செந்தமிழ்க் களஞ்சியத்தின் உள்நாட்டுக் கையொப்பம் ரூ 4. வெளிநாட்டுக் கையொப்பம் ரூ 6. அதற்கு உரைவளம் நல்கும் அடிகளார்க்குத் திங்களுக்கு ஓரிதழுக்கு நூறு ரூபாய். கொடுத்துவிடுவது என்றும் உறுதி செய்யப்பெற்றது. 1920 பிப்ரவரியில் தொடங்கியது செந்தமிழ்க் களஞ்சியம்.

இந் நிலையில் அடிகளார்க்கு அன்பராய் நெல்லையிலே திரு. மா. திரவியம் பிள்ளை என்பார் ஒருவர் திகழ்ந்தார். அவர்