உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

அடிகளாரைப் பன்முறை நெல்லைக்கு அழைப்பித்துச் சொன்மழை பொழியச் செய்தார். அடிகளார் தம் அறிவுப் பயிர் தழைதற்கு அவர் 'திரவியம்' ஆகவும் இருந்தார். அவர்க்கு அன்பர் திரு. செ. விசுவநாத பிள்ளை என்பார். அவர் தமிழும் சைவமும் தழைத்தோங்க வேண்டும் என்பதில் பெரு விருப்பி னராக விளங்கினார். சைவநலங் கமழும் நற்குடியில் தாம் பிறந்திருந்தும் தோல் பதனிடும் தொழிலக மேலாண்மைப் பொறுப்பில் இருக்க நேர்ந்ததை எண்ணி அவர் வருந்துவ துண்டு. அப்போழ்தில், “நம் மக்கள் எத்தனையோ புதுப்புதுப் தொழில் முறைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், உயிர்க்கு ஊதியமாம் அறிவுநூல் வெளியீட்டுப் பணியில் ஈடுபடுவார் லரே" என்று என்று வருந்தி உரைப்பதும் உண்டு. அவ் வருத்தம் திரவியம் பிள்ளையை அசைத்தது. திரவியனார், அடிகளார் துணையை அவாவினார் அடிகளார் எண்ணம் அரங்கர்மேல் படிந்தது. அரங்கர்க்கு அடிகளார் ஆற்றுப் படை ஆனந்தத் தேனாயிற்று.

திரவியம் பிள்ளை வழக்குரைஞர் ஒருவரிடம் எழுத்தராகப் பணி செய்து வந்தவர். தென்னிந்திய வங்கி விதிகளைத் திறமாக அமைத்துத் தந்தவர் அவர். ஆகலின் புதிது தோன்றவிருக்கும் கழக விதிகளை அருமையாய் அமைத்தார். அந் நாளிலேயே உடனிருந்து உதவினார் அரங்கர் தம் இளவலார் வ. சு. சீரிய மாளிகை எடுப்பதற்கு முன்னே வரையும் வரைபடத்தில் அன்றோ அதன் அமைப்பும் அழகும் அருமையும் வளர்ச்சி வாய்ப்பும் எல்லாம் அடங்கிக் கிடக்கின்றன!

கழகத்தின் முதற் பொருள் உரூ. 50,000 என்றும அது, பங்கு ஒன்றுக்கு உரூ.10 விழுக்காடு 5000 பங்குகளாகக் கொடுக்கப்படும் என்றும், திருவரங்கனாரும் திரவியம் பிள்ளையும் கூட்டமைச்சர் களாக இருந்து கழகத்தை நடத்துவது என்றும், கழகம் பதிவு செய்யப்பெற்ற காலம் முதல் இருபத்தைந் தாண்டுகள் அவர்களும் அவர்கள் வழித்தோன்றல்களும் அமைச்சர்களாகவும் கழகச் செயற்குழு உறுப்பினர்களாகவும் விளங்கிக் கழகத்தை நடாத்தும் உரிமை உடையவர் என்றும் உறுதிமுறி எழுதப்பெற்றது. பின், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்” என்னும் பெயரால் 21-9-20 இல் திருநெல்வேலியில் பதிவு செய்யப்பெற்றது.

66

கழகம் பதிவானதும் அரங்கனார் திருநெல்வேலியிலேயே தங்குதற்கு நேர்ந்தது. அதனால் அவர் சென்னையில் நடத்தி