உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

45

வந்த ‘திருசங்கர் கம்பெனி' புத்தக வணிகத்தைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பினை இளவலாரிடம் ஒப்படைத்தார். 1921 பிப்ரவரித் திங்களில் திருசங்கர் கம்பெனி இருந்த பவளக்காரத் தெரு இரண்டாம் எண் அறையிலேயே கழகக் கிளை நிலையம் தொடங்கப்பெற்றது. அதன் முகவராக இளவலார் வ. அமர்ந்தார். அதுமுதல் புத்தக வாணிகம் கழகத்தின் பெயராலேயே நடைபெறலாயிற்று. திருசங்கர் கம்பெனி என்னும் சிற்றாறு, கழகம் என்னும் பேராற்றில் கலந்து ஒன்றாகியது.

சு.

நல்ல எண்ணத்தால் தொடங்கப்பெற்ற நன்முயற்சிக்கும் கூடச் சில வேளைகளில் தடைப்பாடுகள் உண்டாகிவிடவும், உள்ளார்ந்த அன்புடையாரும் எதிரிட்டுக்கொண்டு இகலிடமும் நேர்ந்து விடுவதைக் கண்கூடாகக் காண்கிறோம் அல்லமோ! அத்தகு ஒரு நிலை அரங்கர்க்கும், அடிகளார்க்கும் உண்டாயிற்று.

அடிகளாரை நோக்கியே அரங்கர் செந்தமிழ்க் களஞ்சிய இதழைத் தொடங்கினார் என்பதை முன்னரே அறிந்துள்ளோம். அது தொடங்கிய 1920 பிப்ரவரி முதல் 1922 ஏப்பிரல் முடிய 12 இதழ்களே வெளிப்பட்டன. இருபத்தேழு திங்களில் இருபத்தேழு இதழ்கள் வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதில் பாதியளவும்கூட வெளிப்படவில்லை. பின்னர் அறவே வெளிப் படுத்த முடியாத சூழலும் உண்டாகிவிட்டது. முயற்சியையும், நம்பிக்கையையுமே மூலப் பொருளாகக் கொண்டு தொடங்கிய திருவரங்கருக்கு இந் நிலை எத்தகையதாக இருக்கும்! அடிகளாருக்காக எவ்வுதவி செய்யவும் கடப்பாடு கொண்டவர் எனினும் தம் நாநயம் இழந்து தலைகுனிய நேர்ந்த இதழ்த் தடைப்பாட்டினை எண்ணி எண்ணி வருந்தினார். அடிகளார் மேல் தாம் கொண்டுள்ள பெருமதிப்புக்காகப் பொது மக்களிடையே ஏற்படும் தலைக்குனிவைத் தாங்கிக்கொள்ளவும், தாம் மேற்கொண்ட அரிய முயற்சியில் தோல்வியால் துவளவும் அவர் நெஞ்சம் ஒருப்படவில்லை.. ஆனால், அடிகளாரால் பல்வேறு பணிகளுக்கும் ஆழ்ந்த ஆய்வுக்கும் இடையே திங்கள்தோறும் தொடர்ந்து திருவாசக விரிவுரையைக் காலத்தால் எழுதித் தரவும் கூடவில்லை.

ஆழ்ந்து அகன்று நுண்ணியதாம் இறைமையைப்பற்றி, உருகி உருகிப் பாடிய திருவாசகத்தின் உரையைப் புனைகதை போலவோ, உலகியல் கட்டுரை போலவோ விரைந்து வரைந்து விடக்கூடுமோ? அவ்வாறு விரைந்து வரைந்து பக்கத்தை நிரப்பி அடிகளார், தம் புலமைக்கோர் இழுக்கை வருவித்துக்கொள்ள