உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




15. அடுத்தடுத்தும் அடைமழை

("இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடுமபத்தைக்

குற்றம் மறைப்பான் உடம்பு")

-திருக்குறள் 1029

திரு.வ.சு. அவர்களும், திருவாட்டி மங்கையர்க்கரசியாரும் தம் இனிய மக்கள் தமிழரசி, வயிரமணி ஆகியவர்களுடன், அருமை அண்ணல் அரங்கனார் மக்களுக்கும் தந்தையும் தாயுமாக விளங்கினர். தம் இருகுழந்தைகளுடன் அவ் வெண்மருமாகப் பதின்மரையும் அரவணைத்துப் போற்றி வந்தனர். இவ் வன்புச்சூழல் ஓரளவுக்கு அன்னையார் சுந்தரத்தம்மையார்க்கு ஆறுதல்தந்தது. தம் பேரப்பிள்ளைகளைக் கொண்டணைத்துக் குளிர்ந்தார். தம் மைந்தனார் செயலையும், மருமகளார் பான்மையையும் எண்ணி இறைவன் திருவருள் இருந்தவாறு எனப் போற்றி வழிபட்டார். இவ்வகையில் ஆண்டுகள் சில நகர்ந்தன.

நீலாம்பிகையார் மறைந்தபோது, அவர்தம் மூத்த மகளார்க்கு அகவை பதினைந்து.அவர்க்கு அடுத்தவருக்கு அகவை பதின் மூன்று. அவர்கள் இருவருக்கும் திருமணம் கூட வேண்டிய பொழுதாக இப்பொழுது இருந்தது. அதனை நிறை வேற்றுவதற்கு வ. சு. அவர்களும், அவர்தம் அன்பு மனைவியாரும் தலைப்பட்டனர்.

நெல்லைத்தலைமைக் கழகத்தில் புலியூர்க்குறிச்சி திரு.க. சொக்கலிங்கம் தலைமை எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். அவர்அரங்கனாரால் பணி அமர்த்தம் செய்யப்பெற்றுப் பணியாற்றிக் கொண்டுவந்தார். அவருக்கு அரங்கரின் மூத்த செல்வியார் மயிலம்மையை மணமுடித்து வைத்தனர். இவர்கள் திருமணம்1947 இல் நிகழ்ந்தது.

அடுத்த மகளார் முத்தம்மாள் என்பர். இவரை நெல்லை நகராட்சியில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்த திரு க. பா.