உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

87

முத்தையா பிள்ளைக்கு 1949 இல் மணம் செய்வித்தனர். இம் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தம் தாய் தந்தையர் போலவே இவர்கள் முன்னின்று நடத்தினர். பின்னே செய்யும் சீர்களையும் பெரிது உவந்து நடாத்தினர்.

“குடும்பப் பொறுப்பு இவ்வாறு நடந்துவந்தபோது கழக பொறுப்பும் விரிவடைந்து கொண்டு வந்தது. பல்வேறு மாநாடு களும், விழாக்களும் நிகழ்த்தப்பெற்றன. 'அப்பர் அச்சகம்' என்னும் பெயரில் ஓரச்சகம் 1948 இல்நிறுவப்பெற்றுக் கழகப் பணியைக் கவினுறச் செய்து வந்தது. 1950 இல் சிவஞானமுனிவர் நூல்நிலையம் நெல்லையில் தோற்றுவிக்கப் பெற்றது. இவற்றால் அரங்கனாரை இற்றைக்கு இருநான்கு ஆண்டுகளுக்கு முன் இழக்க நேர்ந்தது நமக்கு ஏற்பட்ட துனபத்தையும், துயரத்தையும் துடைக்கத்தக்க தகுதி வாய்ந்த உடன் பிறப்பாளர் அவர் உடன் பிறப்பாளராகிய நம் சுப்பையாபிள்ளை அவர்களே. தமையானார் ஆணைவழி ஒழுகி அவர் தம் பணிகளை எல்லாம் அணி பெற ஆற்றுவிக்கும் ஆற்றல் படைத்த நம் ஆட்சிப் பொறுப்பாளர் சுப்பையாபிள்ளை அவர்கள் தம் தமையனாரும், இக் கழக நிறைவேற்றற் கூட்டத்தாரும் எடுத்த பணியைத்தொடுத்து முடிக்கும் முயற்சி சிறந்தே விளங்குகின்றார்கள். இதுவரை இக் கழகத்தில் ஏற்பட்டுள்ள * முத்தலைவர்களின் மனநிலை முற்றும் உணர்ந்து திருந்திய முறையைக் கைகொண்டு வெற்றி பெற்றுச் சிறக்கும் நம் ஆட்சிப் பொறுப்பாளர் திறத்தில் நம் முழு நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது" என்று கழகத்தலைவர் திரு. மு. காசிவிசுவநாதன் செட்டியார் அவர்கள் கழகப்பங்காளிகள் கூட்டத்தில் பாராட்டியுரைத்துச் சிறப்பித்தார். (செ.செ. 26.365)

தொண்டுகள் இவ்வாறு விரிந்தும் பரந்தும் வரும் வேளையில் எதிர்பாராவகையில் தமிழுலகை ஒரு காரிருள் வளைத்துக் கப்பிக் கொண்டது. அது தவத்திரு மறைமலையடிகளார் உடல்நிலைக் கேடாகும்.

அடிகளார் சிவநெறியாலும் செந்தமிழாலும் அரங்கரை ஆட் கொண்டார். அவ்வாட்கொள்ளலே அரங்கரை மருகராகக் கொள்ளும் நலஞ்செய்தது. அரங்கர் "திருசங்கர் கம்பெனி'

திரு. மா. வே. நெல்லையப்பபிள்ளை பி.ஏ. (1920-33) திரு. ப. சிதம்பரம்பிள்ளை பி.ஏ. பி.எல். (1938-48)

திரு. வ. திருவரங்கம்பிள்ளை (அமைச்சர்