உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

தொடங்கியதே அடிகளார் நூல் வெளியீடு விற்பனை குறித்தேயாம் என்பதையும் அறிவோம். பின்னர்ச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொடங்கியதும் அடிகளார் தம் ஆய்வுரையின் படியே தான் என்பதும் நாமறிந்ததே. கழகத்தின் தனித்தமிழ்க் கொள்கையும் வேற்றுமொழித் திணிப்பு எதிர்பபும், பல்துறையில் தமிழ் வளர்க்கும் முனைப்பும் அடிகளார் தொடர்பால் அமைந்தவையேயாம் என்பதும் நாடறிந்த உண்மை. இத்தகைய அடிகளார் நலங்குன்றினார் என்னும் செய்தி திரு.வ.சு. வை உலுக்கியது. அடிகளார் போலும் ஒரு தமிழ்மலையினை எண்மையில் காணவும்கூடுமோ? அடிகளார் 15-8-1950 இல் நலமின்றிப்படுத்தார். அவர் பொன்னுடல் படுக்கையில் வாடி வதங்கிக் கிடந்தது. அறிவுக்களை இருந்தது அப்பொழுதும்! ஆனால் உடல் பெரிதும் தளர்ந்துவிட்டது. நல்லுணர்வோடு இருக்கும்போதே தமக்குப்பின்னேதம்உரிமைப் பொருள்களைப் பிரிந்தது வழங்க வேண்டுதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார். தாம் இனிப் பிழைப்பது இயலாது என்பதை அப்பொழுதே அடிகளார் உணர்ந்துகொண்டார். தாம் அரிதின் முயன்று தொகுத்து வாழ்நாள் எல்லாம் வகையோடு கையாண்டு வனப்புறுத்தி வைத்துள்ள நூற்களஞ்சியம் தமக்குப் பின்னரும் தமிழுலகுக்குத் தக்கவண்ணம் பயன்பட வேண்டும் என்று விரும்பினார். அதற்குத் தக்க நிலையம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகமே என்றும் அதனை நிறுவிக் காட்டவல்ல செயலாண்மையாளர் தம் மருகரின் இளவலும் கழக ஆட்சி யாளரும் ஆகிய திரு. சுப்பையா பிள்ளையே என்பதையும் உள்ளார்ந்த தெளிவால் உணர்ந்தார். அவ்வரிய பணிக்குத் தம்மை ஆட்கொண்ட அம்பலவாணர் நினைவாக இருந்து ஆட்சியாளர் உட்பட எழுவர் செயல் உறுப்பினராகவும் இறுதி முறிவும் எழுதினார். வாரமுறைப்படியாகக் கழகமே தம் நூல்களை வெளியிட்டு அதன் வருவாயையும் எஞ்சிய தம் சொத்தின் வருவாயையும் தம்குடும்பத்தினர்ககு இன்ன இன்னவாறு பிரித்துக் கொடுக்க வேண்டும் எனவும் எழுதித் தம் கையொப்பமும் இட்டார். இது நிகழ்ந்தது 9-9-1950 ஆம் நாள்.

அடிகளார் எவ்வாறேனும் பிழைத்தெழவேண்டும் என டாக்டர் திரு. ஆனந்தர் அவர்களும் திரு.வ.சு. அவர்களும் மிகக்கவலையோடு உன்னிப்பாகப் பலவகைகளினும் முயன்றனர். மனித முயற்சியால் எவ்வளவு கூடுமோ அவ்வளவும் செய்து பார்த்தனர். தமிழும் தமிழரும், அடிகளார் பிழைத்து, மேலும்