உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

89

அரும்பெரும் பணிகள் செய்யும் பேற்றைப் பெறவில்லை. 15-9-1950 வெள்ளிக்கிழமை மாலை 3-30 மணிக்கு அடிகளார் ஆருயிர் அவர் தம் பொன்னுடலைவிட்டு நீங்கி இறையடி சேர்ந்தது.

தமிழகம் கலங்கியது. தமிழ்ப்பெருமக்கள் தவித்தனர். செய்தித்தாள்கள் கரைந்தன. 16-9-1950 இல் அன்புத்தமிழர் கண்ணீர்ப் பெருக்குக்கிடையே அடிகளால் இறுதி முறியில் எழுதி வைத்தவாறு பல்லாவரம் இடுகாட்டில்அவர்கள் திருவுடல் எரியூட்டப்பெற்றது. அனைத்து ஏற்பாடுகளும் தம் ஆற்றாமைக்கு இடையேயும் செய்யும் தவபேறு பெற்றார் திரு. வ.சு. அடிகளார் படுத்த நாள்முதலாக நிகழ்ந்தவற்றை நினைத்தும் உரைத்தும் முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னரும் நெக்கு நெக்குருகி நிற்கும் இவர், அன்று என்ன பாடுபட்டிருப்பார்!

அடிகளார் மெய்யுணர்வுப் பேரொளியர்; ஊடுருவிக் கண்டு உண்மை தெளிய வல்லவர். அவர் அன்று தேர்ந்து தெளிந்து கண்ட உண்மை, இன்று மெய்யாய்க் கனிந்து நிற்றல், மாறுபட்டாரும், மறுக்கமாட்டாத உண்மையாகும்! மறைமலை யடிகள் கலைமன்றம், மறைமலையடிகள் நூல்நிலையம், மறைமலையடிகள் பாலம், மறைமலையடிகள் நகர் என நினைவுச் சின்னங்கள் எழுப்பச் செய்து அடிகளாரை அழியா வாழ்வினர் ஆக்கிக்கொண்டு வரும் அருந்திறலர் வ.சு. அவர்களே என்பதை நாம் உணரும் போது அடிகளார் கூர்த்த மதியையே போற்றிப் புகழ வேண்டியுளது. ஏன்? அடிகளார் நம்பிக்கை அவ்வளவு வலுவுடையது. அவர்தம் இறுதி முறி அத்தகைய திட்பமுடையது!

"நல்லது செய்தற்கு நாலு தடை" என்பது பழமொழி. "நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' என்று சொல்லவேண்டா நன்னாளும் உலகில் வருமோ? அதிலும் இத்தமிழ் மண்ணில் என்றேனும் வருமோ? அடிகளார் முறி தொடர்பாக எழுந்த வம்புகளும் வழக்குகளும் தொடர்கதையாயின். வந்து சேரும் வரிசை வரிசையான தொல்லைகளுக்கு நொந்து ஆவது என்ன?

1951 ஏப்பிரல் திங்கள் இறுதியில் யாழ்ப்பாணத்தில் ‘நான் காவது தமிழ் விழா' நிகழ இருந்தது. அவ் விழாவுக்குரிய ஏற்பாட்டை அந்நாள் தமிழ்நாடு அரசின் கல்வியமைச்சர் திரு. தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் செய்திருந்தார். முதல்விழா