உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

முழுதும் தனி வாழ்வே நான் வாழ்நதிருக்கக் கூடும். என்னைத் தடுத்தாட் கொண்டு தமிழுக்கும் தமிழிலக்கிய வாழ்வுக்கும் தமிழர் வாழ்வுக்கும் ஒரு கருவியாக்கிய பெருமையில் வ.தி. அவர்களுக்கு ஒரு முனை முகமும், வ. சு. அவர்களுக்கே மீந்த முழு முகமும் உரித்தாகும் என்பதை நான் என்றும் மறவேன்.

தூண்டித்துலக்கும் தொண்டர்தம் சீர்மைக்கு இன்னும் என்ன சான்று வேண்டும்? துறைதோறும் துறைதோறும் நூல்கள் வடித்துத் தந்த பெருமக்கள் நெஞ்சார நினைந்து வாயாரப் பாராட்டித் தம்மையே சான்றாக்கியுள்ளனர்.

'யாருமில்லை தானே களவன்' (சான்றாளன்) என்னும், நெஞ்சம் பொய்க்கும் வஞ்ச மாந்தர் வாயினின்று வரும் சொற் களைப் புனைந்துரையெனப் போக்கிவிடலாம்: ஆனால் “செய்யா கூறிக் கிளத்தல் எய்யாதாகின்று எம் சிறுசெந் நாவே என்னும் சீரியர் உரை எவ்வளவு மதிப்பிற்குரியது :

ஓய்வுபெற்ற மாவட்டததுணைத் தலைவர் பெரும் புலவர் திரு.கு. கோதண்டபாணி பிள்ளை அவர்கள் முதற்குறள் உவமை, நெடுநல்வாடை, ஆராய்ச்சி முதலிய அரிய நூல்களின் ஆசிரியர்; தமிழ்ப்பண்ணாராய்ச்சி வித்தகர்; அவர் தம் நூல்கள் வெளிவந்து உலாவிய வகையினை குறிப்பிடுகின்றார்:

"அரசியல் பணியாளானகிய என்னைத் தமிழ்ப்பற்று எவ்வாறோ பற்றிக் கொண்டது. நூல்கள் சில எழுதலுற்றேன். நான் புலவனல்லேன், வித்துவானும் அல்லேன், ஆதலின் புலவர்கள் தொடக்க காலத்தில் என் நூல்களைப் புறக்கணித்தனர். என் நூல்களின் கருத்துக்கள் ஆழமுடையவை. ஆதலின் பொது மக்களுக்கு அவை எளிதே விளங்குதல் அரிதாகியது. ஆதலின், என் நூல்களை விரும்பி வாங்குவார் இலர் ஆயினர். இந்நிலையில் நான் எழுதிய நூல்களில் சில அச்சிடப்பெறாமலும் சில அச்சிடப் பெற்றும் நடமாட்டம் இன்றியும் உறங்கின.

"இந்நூல்கள் தக்கவை, அவற்றுள் பொதிந்த கருத்துகள் தமிழ்மக்களிடையே பரவுதல் வேண்டும் எனத் திரு. வ. சுப்பையா பிள்ளை எவ்வாறோ அறிந்தனர். அவற்றை வெளியிட முன் வந்தார். அவர் துணிவைத் தெரிந்து நான் வியப்படைத்நதேன். 'தமிழ் ஆக்கம் கருதி முதலிழக்கும்' செயலாகுமே என்று கூடக் கருதினேன்.