கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
ஓ
101
செலவில் எத்தகைய நூலையும் வெளியிட மிகவும் அஞ்சினேன். துணிந்து வெளியிடப் பொருளும் என்னிடமில்லை.
'அந்நிலையில், இலக்கணம், சொல்லராய்ச்சி, மொழியா ராய்ச்சி அரசியல் வரலாறு, விளையாட்டு முதலிய இலக்கியப் பொருள் பற்றியனவும், புலமக்கள் அன்றிப் பொதுமக்கள் வாங்காதனவும், விரைந்து விலையாகாதனவும், ஆரிய வெறியர்க்கு மாறானவும், வெளியீட்டிற்குப் பெருஞ் செலவு செய்ய வேண்டியனவும், சிறியவற்றோடு பெரியனவுமான இயற்றமிழ் இலக்கணம், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், திரவிடத்தாய், சுட்டு விளக்கம், முதற்றாய்மொழி, பழந்தமிழாட்சி, மாணவர் உயர்தரக் கட்டுரை இலக்கணம் (2 பாகம்) என்னும் எண்ணூல் களோடு நான் ஏற்கனவே வெளியிட்ட கட்டுரை வரைவியல் என்னும் நூலையும் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சி மேலாளரான தாமரைத் திரு.வ. சுப்பையாபிள்ளை அவர்கள் வாரமுறையில் (Royalty System) ஒவ்வொன்றாக வெளியிட்டு விற்பு விலையில்ஒப்ந்தத்திற்கு ஏற்ப உரிமைத் தொகையும் ஆண்டிற்கு இருமுறை கணித்து ஒழுங்காக அனுப்பிவந்திருக்கின்றார்கள். இதனால் நான் ஒருபோதும் வெளியிட்டிருக்கமுடியாத பல அரிய நூல்கள் வெளிவந்து என்பெயர் உள்நாடும், வெளிநாடும் பரவியதுடன் என் தமிழ்த் தொண்டும் பன்மடங்கு சிறந்து வந்திருக்கின்றது. அவர்கள் ஒப்பந்தப்படி விடுத்து வந்த அரையாட்டைத்தொகை என் குறைந்த சம்பளக் காலத்தும் வேலையில்லாக் காலத்தும் பெரிதும் உதவியதென்பதை நான் சொல்ல வேண்டுவதில்லை.
"வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன், மெய்கூறுவல்" என்னும் கொள்கையில் அசையாத பாவாணர் பகர்ந்துள்ள குறிப்பு வ.சு. அவர்கள் துலக்கிய மாண்பை மலையிலக்கென வெளிப்படுத்தும் அன்றோ?
பன்மொழிப் பெரும்புலவர் குறள்மணிவிளக்கக்கோமான் கா. அப்பாத்துரையார் கூறுகின்றார்: அவர்கள் ஆர்வக்கனவில் முயற்சித்துடிப்பில் தன்னம்பிக்கைத் தறுகண்மையில்சிக்கும் பேறு பெற்ற தமிழர் எவரும் ஆர்வத்தால் அரிய செய்வர், முயற்சியின் முகடெய்துவர், தன்னம்பிக்கை பெற்று அவர் ஆர்வத்தைத் தம் செயலாக்கி வெற்றி பெறுவர். இதற்கு என் வாழ்க்கை சான்று. பிற மொழிகளுக்கே நான் என் வாழ்வைக் கொடுத்திருக்கக்கூடும். அரசியற் பணிகட்கோ அரசியலுக்கோ கூட, என் ஆற்றலும் ஆர்வமும் முழுதும் ஆளாகியிருக்கக்கூடும்.