உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

நெடுந்தவத்தால் தோன்றிய தலைமகனார் தமிழின் தொன்மை முன்மை முதலாயவற்றை மறுக்கொணா வகையில்நிலைநாட்டி மாந்தன் முதுன்மொழி தழே என்பதை நிலைநிறுத்தியவர் மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் ஆவர். அவர் கூறுமாறு, "சென்ற நூற்றாண்டின் இறுதியிலே, சூரிய நாராயண சாத்திரியார் தம் பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றித் தமிழர்க்குத் தனித்தமிழ் உணர்ச்சியூட்டினாரேனும், அது செயலளவில் தொடராது உணர்ச்சியளவிலேயே நின்றுவிட்டது. ஆனால், தேனும் பாலும் போன்ற தூய தீந்தமிழ்ச் சொற்களால் உரைநடையும் செய்யுளுமாகிய இருவடிவலும் பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேறபட்ட அருநூலியற்றி முதலிரு கழக நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிரளித்தவர், மாநிலத்தில் மக்கள் உள்ளவரைமறையாப் புகழ்பெற்ற மறைமலையடிகளே. அவ் வடிகளார்க்குப் பின்ன அவர் விட்டும் தொட்டும் சென்ற அரும்பணியை ஆழ்ந்து அகன்ற நுண்ணிய அறிவால் தமிழைப் பண்டைத் தூயநிலைக்குக் கொண்டு போய் வைத்துப் புதுமை யெல்லாம் பிறங்கிச் செறியச் செய்த செந்தமிழ்ச் செம்மல் பாவாணர் அவர்களே; அவர்தம் அரிய ஆராய்ச்சிச் சுவடிகள் அனைத்தும் நம் நல்வினைப் பயத்தால் அடைந்துதுய்த்தற்குத் தூண்டி நின்றோர் யார்? அவர், நம்அயராத் தொண்டர்வ.சு. அவர்களே.

1938 இல் நான் திருச்சிப்புதூர் ஈபர் மேற்காணியார் (Bishop Heber) உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரி யனாக இருந்த போது திரு. (G) அரசகோபாலாச்சாரியார் தமிழ்நாட்டு முதலமைச்சராகி இருநூறு உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தினார். உடனே தமிழர் எதிர்ப்பு எழுந்தது. இந்தி புகுத்தப்பட்ட பள்ளிகட்குமுன் மறியல் செய்த தமிழ்த்தொண்டர் சிறையிலிடப்பட்டனர். பெரியாரும் அதற்கு ஆளாயினார். முறைப்பட்ட தமிழ்க்காப்பு, வகுப்பு வேற்றுமைக் கிளர்ச்சியாகத் திரிக்கப்பட்டது. சிறைத் தண்டனையுற்ற தமிழ்த் தொண்டரின் தற்காப்பிற்காக 'ஒப்பியன் மொழிநூல்' முதற் புத்தகம் - முதற்பாகம் என்னும் நூலை எழுதினேன். ஆயின், அதனை வெளியிடம் தமிழ்ச் செல்வரும் தமிழ்க்கட்சித் தலைவரும் முன்வரவில்லை. சிறு தொகையும் உதவவில்லை. அதனால், என் அடங்காத் தமிழ்ப்பற்றும் மடங்காத் தன்மானமும், என் கைப் பொருள் கொண்டு அதனை வெளியிட்டு ஓராயிரம் ரூபா இழக்கச் செய்தன. அங்ஙனந் தாங்கொணாச் சூடு கண்டதினால்அதன்பின் என் சொந்தச்