உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

எழுதிக்கொண்டே வந்தார்.

107

“எறும்பூரக் கல்லும் குழிந்தது. பத்துத்திங்களில் நூலும் அச்சுப் பொறியேறும் அளவினதாயிற்று.

"தமிழில் எழுதி மாட்டப்பெறும் பெயர்ப்பலகைகள் - பெரும்பாலும் வணிக நிறுவனங்களுக்குரியன - பொருத்தமான வடிவில் திருத்தமான மொழியில் பிழையின்றி எழுதப் பெற்றிருப்பதைக் காண்பது அரிதாக இருக்கின்றது. இதைக் கூறிக்கூறித் துன்புறுவார்கள் திரு. பிள்ளையவர்கள்.

தம் எழுத்தர்களைத் தெருவு தோறும் ஏவி ஆங்காங்கு இடம் பெற்றுள்ள பலகைகளில் காணும் சொல் உருவங்களைத் திரட்டி வரச்செய்து என்னிடம் ஒரு படியைத்தந்துள்ளார்கள். நல்ல தூய தமிழிலே அப் பலகைகளை அமைப்பதற்கு வணிகர் களுக்கு ஊக்கம் ஊட்டும் வகையிலே அச்சிட்டு வழங்க அப் பெயர்களுக்குத் திருந்திய உருவமைத்துத்தருமாறு என்னைப் பலமுறை பார்த்து வலியுறுத்திக்கூறியபடி இருக்கின்றார்கள். எனக்கும் இப் பணியை இனிது முடிக்க அவா உந்தாமல் இல்லை. எனினும் அவர்களது இடைவிடாத் தூண்டுகோலே இத் தொண்டில் என்னை விரைந்து ஈடுபடுத்தி வெற்றியோடு இதனை முற்றுவிக்கத் துணைபுரியும் ஆற்றலுடையதாகும்."

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை" "சொல்லவும் கூடுவ தில்லை - அவை சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்' "என்றந்தப் பேதை உரைத்தான்- ஆ! இந்தவசைஎனக் கெய்திட லாமோ? சென்றிடு வீர் எட்டுத் திக்கும் -கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"

என்று தமிழ்த்தாய் மொழிவதாகப் பாரதியார் பாடினார். அந்தச் சுப்பு சொல்லய மொழிஇ இந்தச் 'சுப்பு' உள்ளத்தில் சுடர்ந்தது. பேரொளி செய்தது. அறிவியல்கலைகளை அருந்