உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

இளங்குமரனார் தமிழ்வளம் - 27 ஓ

தமிழில் கொணர்தல் வேண்டும். புத்தம் புதுக்கலைகளை யெல்லாம் பொலிவுறுத்தும் புது நூல்கள் ஆக்க வேண்டும். என்னும் பேராவல் உந்தியது. அவ்வுந்துதல் ஒரு வேலனையும் ஒரு சாமியையும் தமிழுலகுக்குத் தந்தது.வேலன் திருவாளர் என். கே. வேலன், சாமி திருவாளயர் பி.எல். சாமி.

"மின்சாரத்தின் அற்புதங்களைப் பற்றிக் குழந்தைகளுக் கான முறையில் ஒரு நூல் எழுதலாம் என்றார்கள். உடனே எழுதிக் கொடுத்தேன். அதனை அழகாக அச்சிட்டு வெளியிட்டார்கள். அதற்கு அரசினர் பரிசு ரூ. 500 கிடைத்தது. கலிவரின் யாத்திரை என்ற நூலை எழுதினேன். இன்னும் சற்று விரிவாக எழுதலாம் என்றார்கள். குறிப்பிட்ட நேரத்தில் எழுதிக் கொடுத்தேன். விரைவாக எழுதும் ஆற்றல் உங்களிடம் இருக்கின்றது, அதனைப் பயன்படுத்த வேண்டும்' என்றார்கள். 'நிலவைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்பொழுது நிலவைப் பற்றி எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்' என்றார்கள். நிலவைச் சுற்றிய கதை என்ற நூலை எழுதினேன்". இவை வேலன் அவர்கள் விடுக்கும் செய்தி. காவல் துறைத் துணை ஆணையர் பதவியாளர் தமிழில் அறிவியல் எழுதினார் என்றால், ஆட்சியாளர் வ.சு. வின் தூண்டலுக்கு எவ்வளவு பயன்!

சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் என்னும் அரிய நூல்களை ஆக்கித் தமக்கென எழுத்துத் துறையில் ஒருசீரிய இடத்தைக் கொண்டவர் திரு. பி. எல்.சாமி, ஐ.ஏ. எசு. அவர் புதுவை அரசில் பெருநிலைப் பதவி தாங்கியிருப்பவர். அவர் கூறுகிறார்: "நீங்கள் சங்கநூற் செய்திகளை அறிவியலுடன் தொடர்புபடுத்தி விளக்கம் தரும் நூல்களைக் கழக வாயிலாக வெளியிட வேண்டும்என்று தூண்டினார். தொடர்ந்து என்னை நினைவுறுத்தி எழுதச் சொல்லிக் கொண்டிருந்தார். அரசு அலுவல் செய்யு என்னை நூலாசிரியன் ஆக்கியவர் திரு. சுப்பையா பிள்ளையவர்கள் என்றால் இது மிகைக் கூற்று அன்று".