உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கு

18. மூலவர்

(மாசு துடைத்து மணியாக்குதல் ஒப்பற்ற ஒரு பணி; ஆனால் மறைந்து கிடக்கும் மணியைக் கொணர்ந்து மன்றத்தில் வைத்து ஒளி செய்ய விடுவது மற்றொரு பெரும்பணி; பணிவில் இருந்துதான் புலப்படுவதோ பணி.)

"தனியாக ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடந்த புலவர் பெரு மக்களை முற்றத்தில் கொண்டுவந்து அவர்களைப் பாராட்டிப் போற்றி வரும் திரு, பிள்ளை அவர்களின் அரிய பண்புகளை யான் உளமாரப் பாராட்டுகின்றேன்.

'மூலை இருந்தாரை முற்றத்தே விட்டவர் சாலப் பெரியரென்றுந்தீபற

தவத்தில் தலைவரென் றுந்தீபற'

என்ற திருவுந்தியாரின் திருப்பாடலுக்குத் திரு. பிள்ளை அவர்கள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளார்கள்” என்று தாம்பரம் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர் திரு. பூ. ஆலால சுந்தரனார் குறிப்பிடுகின்றார். அவ்வகைத் தொண்டால் வ.சு. அவர்கள் தனிச் சிறப்புறும் ஒரோ ஒருவர் ஆகின்றார். தேடி வருவாரைப் போற்றுதலே அருமையாய் இருக்கும் உலகத்தே, தக்காரைத் தேடிப்போய்க் கொணர்ந்து போற்றிச் சிறப்பிப்பாரை எப் பதிப்பகத்து உரிமையாளர் வாழ்விலும் காண்டற்குக் கூடுமோ?

கழக அமைச்சர் அரங்கர் கொழும்பு வணிக நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்த நாளிலேயே அவருடன் பயின்று பழகியவர் சைவப் புலவர்சித்தாந்த பண்டிதர் திரு.ப. இராமநாதபிள்ளை அவரைத் திரு. வ.சு. அவர்கள் தக்ககையில் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். அரும்பெரும்புலமை, ஆரும் அறியாமல் குடத்துள் விளக்காக அமைந்துவிடுதலை அறவே விரும்பாத உணர்வு வ. சு. அவர்களுக்கு இயல்பாகவே பெருகியிருந்தது. ஆதலால் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி போல அரும்புலவர்களைத் தெரிந்து கழகத்தோடு