3
கழக ஆட்சியர் வ.சு.வரலாறு ஓ - உதவியமை பேருதவியாக இருந்தது.
125
திருவிளையாடற் புராணம் சோடசாவதானம் திரு.தி.க. சுப்பராய செட்டியார் இயற்றிய பதவுரை விளக்கவுரைகளுடன் 1884 இல் வெளிவந்தது. உரையாசிரியரின் உறவினர் ஒருவர் எழுமூர்ப் பெரியதெருப் பக்கமுள்ள ஒரு சந்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் 300 படிகள் விலை போகாமல்கிடந்தன. அவற்றை வாங்கிக் கட்டடஞ் செய்து விற்றுத் தந்தனர்.
இப் பணியால் தம் நிறுவனத்திற்கு விற்பனை ஊதியம் ஓரளவு கிடைக்கும் எனினும், விற்றுத் தருதலால் அவர்களுக்குக் காலத்தால் கிடைக்கும் பேருதவி மிகச் சிறந்த ஒன்றாகும் என்பது கருதத்தக்கது. இத்தகைய வாய்ப்பு பலருக்குக் கிடைக்காமையால் பழையதாள் விலைக்கு நிறுத்துப் போட்டவர்களும், குப்பையாக மடித்துப்போக அள்ளிப் போட்டவர்களும் உண்டு என்பதை அறிபவர்கள் இவ்வுதவியை நன்கு நினைவு கூர்வர்.
ஒரு நூற் பதிப்பாளர், இன்னொரு நூற்பதிப்பாளருக்கு உதவுதல் இந்நாட்டில் அருகாமையினும் அருமையார். தடையாக இல்லாமல் இருந்தாலே பெருமையான செய்தி. இன்ன நூல் அச்சாகின்றது என்று தெரியாமலே அச்சிடுவதும், அவ்வாறு அச்சிடப் பெறும் நூலையும் கரவாகத் தெரிந்து அதற்கு முன்னரே அந்நூலை எதிர்பாராவகையில் வெளியிட்டுத் தாம் நலம் பெறுவதுடன், அயற் பதிப்பகத்தாருக்குக் கேடு சூழ்வதும் நிகழக்கூடியனவே, அதிலும் ஏட்டுச் சுவடியை ஆய்ந்து வெளியிட்ட காலத்தில் இது பெருவழக்காக இருந்தது. பிறரொருவர் பதிப்பதற்குத் தம்மிடமுள்ள ஏட்டுச் சுவடியை ஒப்பு நோக்குதற்கும் உதவாத உதவியாளர்களும் இருந்தனர். இத்தகையவர்களுக்கு இடையேயும் எவ்வாறேனும் நூல் செவ்வையாக வெளிவந்தால் போதும், அதனை யாம் வெளி யிட்டால் என்ன? அவர் வெளியிட்டால் என்ன? இந்நாட்டுக்கு அவ்வறிவுக் கருவூலம் தட்டின்றிக் கிடைத்தால் போதும என்னும் எண்ணம் உள்ளவர்களும் சிலர் இருந்துள்ளனர். அவர்களால் தாம் நாடும் மொழியும் இனமும் நலம் பல பெற்றுள்ளன. திரு.வ.சு. பிறர் நூல் வெளியீட்டுக்குச் செய்துள்ள உதவி, பாராட்டுக்கு உரியதும், நினைதோறும் இன்பம் நல்குவதுமாம்.