கழக ஆட்சியர் வ.சு.வரலாறு க
137
என்னும் வகையறியா மக்களும், ஒருவரின் விஞ்சி ஒருவராகத் தமிழ்மொழிக்குக் கேடு சூழ்ந்து வந்துளர். இந்நாளிலும் அறவே நின்றபாடில்லை. வடமொழியாளர் ஏமாற்றும் எத்தும் கூடிய வேலை இவ்வாறாக, ஆங்கில மொழியும் அதன் தாக்குதலை ஆட்சிப் பெயரால் நடாத்தியது. உரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தளத்திற்கு இருபக்கமும் இடி என்ற அளவில் அமையாமல் பலப்பல வகைகளில் தமிழ் சீரழிந்து வந்தது. ஒவ்வொருவரும் அன்னைமொழிக்கு உண்டாகிய ஊறுகளைக் களைதல் கடமை யாக்க கொண்டிருப்பராயின், “இளைதாக முள்மரம் கொல்க” என்பதற்கு ஏற்பக் களையப்பட்டிருக்கும். இக் களைகளைக் களைந்தெறிவார் வேண்டுமே! அதுவும் மேடையேறிச் சொல்லிய அளவில் கடன் தீர்ந்தது என்று இல்லாமல் தொடர்ந்து பணி செய்ய வேண்டமே! இவ்வாறு தொடுத்துமுடித்தலில் வல்லவர் திரு.வ.சு. அவர் அயரா முயற்சியால் தென்னிந்திய தொடர் வண்டி நிலையங்களின் பெயர்கள் சிலவும் ஊர்ப் பெயர்கள் சிலவும் திருத்தம் பெற்றன. இப்பணிக்கு முன்னாள் கல்வி மைச்சர் திரு. தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார் துணைநின்றா என்பது குறிப்பிடத்தக்கது.
'பீச்சு' கடற்கரை எனவும் 'போர்ட்' கோட்டை எனவும், 'பார்க்', பூங்கா எனவும், 'ஜங்சன்', சந்திப்பு எனவும் 'தின்னவேலி' 'திருநெல்வேலி' எனவும் திருவாலூர், திருவாரூர் எனவும், மாயவரம் மாயூரம்எனவும் இந்நாள் வழங்கப்படுகின்றன எனின் அப் பணி செய்தவர் திரு.வ.சு. அவர்களே என்க.
தமிழ் நாட்டுத் திருக்கோயில்கள் தமிழ்மக்களுக்காகத் தமிழ் வேந்தர்களாலும் தமிழ்ச்செல்வர்களாலும் தமிழ்நாட்டுச் செல்வத்தால் தமிழ்நாட்டு உழைப்பாளர் கலைத்திறத்தால் கட்டப் பெற்றவையாகும். மூவர் முதலிகளும், ஆழ்வார் பெருமக்களும் அருணகிரியார் முதலிய அடியார் பெருமக்களும் பண்ணிசைத்துப் பாடிய தமிழ் இசைப்பாடல்களை வரித்துக் கொண்டு வானோங்கி நிற்பன. ஆயினும் அக் கோயிலுக்குள் தமிழ் ஆட்சி இல்லை, தமிழ் வழிபாடு இல்லை, தன்னை வயிறு வாய்த்து உயிராய், உணர் வாய் ஓம்பி நின்ற நற்றாயை ஒட்டுக் குடியில் இருக்கவும் கூட இடம் தராது ஒதுக்கித்தள்ளி, வெற்றியும் கொண்ட அறக் கேடாக செயல் இது. இதனை உணர்ந்து தமிழ் வழிபாடு நடாத்துற்கு முனைந்து பாடுபடுபவர்களுள் திரு.வ.சு.