உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

அவர்களும் ஒருவர்; குறிப்பிடத்தக்க ஒருவர். இது தொடர்பாக அவர்கள் எடுத்துக்கட்டாகச் சில குறிப்புகளைக் காண்போம். 'செந்தமிழ்ச் செல்வியில்' 'செய்திகளும் குறிப்புகளும்' என இதழ்தோறும் அவர்களால் எழுதப் பெறும் குறிப்புகள் இவை. இதற்குமா எதிர்ப்பு?

“12-8-71 மாலை சென்னை தங்கசாலைத் தெருவிலுள்ள ஏகாம்பரேசுவரர் கோயிலில் தமிழக அறநிலையப் பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு கண்ணப்பன் அவர்கள் தலைமையில் திரு முருக கிருபானந்தவாரியார் தமிழில் மலர் வழிபாட்டினைத் துவக்கி வைத்தார். அப்போது பார்ப்பனர் ஒருவர் தலைமையில் ஒருசிலர் கூடித் தமிழில் அர்ச்சனை கூடாது என்ற சொற்றொடர் அடங்கிய அட்டையைப் பிடித்து நின்று மறியல் செய்தார்களாம். அப்படிச் செய்தவர்கள் வேறு யாரும் இல்லை. எங்கு எப்பொழுது தமிழுக்கு ஆக்கம் தேடப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த ந்திகள் குறுக்கிட்டுப் பேச்சாலும் எழுத்தாலும் பிற குறும்புத் தனங்களாலும் மறைக்கும் பழக்கத்தை மேற்கொண்டவர்கள் தாம். எனவே, இந்த எதிர்ப்பு நமக்குப் புதிதன்று.

"முன்னர்த் தமிழிசை இயக்கம் தோன்றிய காலத்திலும், அதற்கு முன்னர் மறைமலையடிகள் காலத்தில் தனித்தமிழ் இயக்கம் தோன்றிய காலத்திலும், ஆங்கிலத்தில் உள்ள ஆட்சிச் சொற்களுக்கும் அறிவியற் சொற்களுக்கும் தூய தமிழ்ச்சொற் களை அமைக்கும் காலத்திலும் அவற்றை எதிர்த்தவர்கள் தாம் இன்று தமிழ் அருச்சனையையும் எதிர்க்கிறார்கள். இறைவனை வழிபடுவதிலும் குறுக்கிடும் இக் கோணல் மதியினரைக் கண்டு இதற்குமா எதிர்ப்பு? என மக்கள் வியந்து பேசுகின்றனர்.”

எதிர்ப்பு அட்டை பிடித்து மறியல் செய்த அளவுடன் நில்லாமல் நீதிமன்றத்திற்குச் சென்றது 'தமிழில் மலர் வழிபாடு செய்தல் கூடாது என்றும் கூட்டம்! அதனைப்பற்றி விளக்கி எழுதி, தேவார திருவாசகச் சீர்த்தியால் திகழ்ந்த மடங்கள் திசை கெட்டுப்போகும் நிலையையும், எடுப்பார் கைப்பிள்ளையாய்த் திருமடங்களின் தலைவர்கள் இருக்கும் மடிமையையும் குறித்துக் காட்டுகின்றார் வ.சு.